Page Loader
வெளியானது 'சந்திரமுகி 2' படத்தின் ட்ரைலர்
வெளியானது 'சந்திரமுகி 2' படத்தின் ட்ரைலர்

வெளியானது 'சந்திரமுகி 2' படத்தின் ட்ரைலர்

எழுதியவர் Nivetha P
Sep 03, 2023
04:56 pm

செய்தி முன்னோட்டம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா நடிப்பில் 17 ஆண்டுகள் முன்னர் வெளியாகி மக்களின் மனதை கவர்ந்த திரைப்படம் 'சந்திரமுகி'. இயக்குனர் பி.வாசு இயக்கிய இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் 'சந்திரமுகி 2' தற்போது தயாராகி உள்ளது. இதில், ரஜினியின் புகழ்பெற்ற வேட்டையன் ராஜா கதாபாத்திரத்தில் ராகவா லாரன்சும், சந்திரமுகியாக கங்கனாவும் நடித்துள்ளனர். மேலும் இத்திரைப்படத்தில், வடிவேலு, லட்சுமி மேனன், ராதிகா சரத்குமார் போன்றோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு, ஆஸ்கார் விருதை வென்ற எம்.எம்.கீரவாணி இசையமைத்துள்ளார். இப்படம் வரும் 15ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலர் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

ட்ரைலர் வெளியானது