சூர்யா 48: ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சூர்யா - டி.ஜே.ஞானவேல் இணையும் பிரம்மாண்ட திரைப்படம்
செய்தி முன்னோட்டம்
'கருப்பு' திரைப்படத்தின் மெகா ஹிட் வெற்றியை தொடர்ந்து, நடிகர் சூர்யா தற்பொழுது பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய ஃபார்மில் உள்ளார். இதனைத் தொடர்ந்து, அவரது அடுத்தடுத்த படங்களின் அறிவிப்புகள் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி வருகின்றன. அந்த வகையில், விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் இந்திய அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய 'ஜெய் பீம்' படத்திற்கு பிறகு, நடிகர் சூர்யாவும் - இயக்குநர் டி.ஜே.ஞானவேலும் மீண்டும் புதிய படத்திற்காக அதிகாரப்பூர்வமாக கைகோர்த்துள்ளனர். 'கே.ஜி.எஃப்' மற்றும் 'காந்தாரா' போன்ற பிரம்மாண்ட வெற்றிப் படங்களைத் தயாரித்த இந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே ஃபிலிம்ஸ், சூர்யாவின் புதிய 'சூர்யா 48' திரைப்படத்தைத் தயாரிக்கிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
The next chapter... #SuriyaXHombale
— Hombale Films (@hombalefilms) June 29, 2026
He built it.
Frame by frame. Film by film. Fight by fight.
Roles that bled truth.
Characters that carried the weight of real lives.
A journey defined by courage, conviction, and craft.
Three decades of truth on screen.
Countless hearts… pic.twitter.com/HoZOgQRbC7
தகவல்
திரைக்களம் குறித்த சுவாரஸ்ய தகவல்
அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும், இத்திரைப்படம் தமிழ்நாட்டின் மிகப்பிரபலமான '5 ரூபாய் மருத்துவர்' என்று அன்போடு அழைக்கப்படும் மறைந்த டாக்டர் திருவேங்கடம் வீரராகவன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாக உள்ளதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நீதிமன்றம் மற்றும் காவல்துறை பின்னணி இல்லாமல், முற்றிலும் மாறுபட்ட ஒரு சமூகப் பின்னணியில், உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த உணர்வுப்பூர்வமான கதையை டி.ஜே.ஞானவேல் இயக்கவுள்ளார். 'கருப்பு' திரைப்படத்தை தொடர்ந்து, 'சூர்யா 48' திரைப்படத்திற்கு இசையமைக்க சாய் அபயங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மிக பிரம்மாண்டமான முறையில் பான்-இந்தியா திரைப்படமாக உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக காயடு லோஹர் நடிக்கிறார்.