தமிழ்நாட்டில் ரூ.100 கோடி, உலகளவில் ரூ.150 கோடி வசூல்: நடிகர் சூரியின் 'மண்டாடி' சாதனை
செய்தி முன்னோட்டம்
தமிழ் சினிமாவில் கதாநாயகனாக தடம் பதித்து அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் ஹிட்களை கொடுத்து வரும் நடிகர் சூரியின் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் பட்டையைக் கிளப்பி வரும் திரைப்படம் 'மண்டாடி'. படம் வெளியான நாள் முதலே பார்வையாளர்களின் ஆதரவையும், விமர்சகர்களின் பாராட்டுகளையும் இப்படம் தொடர்ந்து பெற்று வருகிறது. நடப்பாண்டில் திரைக்கு வந்த படங்களில் முக்கிய வெற்றியாக அமைந்துள்ள இது, திரையரங்குகளில் மக்களின் ஆதரவுடன் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய மைல்கற்களை எட்டி வருகிறது. இதனால் நடிகர் சூரி தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத நடிகராக உருவெடுத்து நிற்கிறார்.
வசூல்
தமிழ்நாட்டில் ரூ.100 கோடி வசூல்
இந்நிலையில், படத்தின் பிரம்மாண்ட வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நடிகர் சூரி தனது எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் உற்சாகத்துடன் வெளியிட்டுள்ளார்.
அதன்படி, 'மண்டாடி' திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ.100 கோடிக்கும் அதிகமான வசூலை வாரிக் குவித்து சாதனை படைத்துள்ளது.
மேலும், உலகளாவிய அளவில் ஒட்டுமொத்தமாக ரூ.150 கோடிக்கும் அதிகமான வசூலைக் கடந்து பாக்ஸ் ஆபீஸில் சாதனைப் பயணம் மேற்கொண்டு வருகிறது.
மண்டாடி வகையறா கொண்டாட்டங்கள் மேலும் பிரம்மாண்டமாக மாறுகிறது. திரையரங்குகளில் திருவிழா தொடர்கிறது என நடிகர் சூரி நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ள இந்தச் செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
embed
Twitter Post
The #Mandaadi Victory is getting more thunderous! 🔥💥 The Biggest Blockbuster of the Year, #Mandaadi, has crossed ₹100+ Crores Gross in Tamil Nadu, while the Worldwide Gross has surpassed ₹150+ Crores! 🔥 The #Mandaadi Vaigaiyara Celebrations are only getting BIGGER! ⚓💥... pic.twitter.com/N7EhArjOsf— Actor Soori (@sooriofficial) October 5, 2026