'லியோ' படத்தின் இரண்டாவது லிரிக்கல் வீடியோ பாடல் வெளியானது
செய்தி முன்னோட்டம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் 'லியோ'. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடித்துள்ளார், அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.
செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மன்சூர்அலிகான், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என நான்கு மொழிகளில் வரும் அக்டோபர் 19ம் தேதி திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமாக ரிலீஸாகவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் 'படாஸ்' என்னும் இரண்டாவது லிரிக்கல் வீடியோ பாடலினை படக்குழுவினர் இணையத்தில் சற்றுமுன்னர் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ வெளியாகி 30 நிமிடங்களில் 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
லியோ 2வது சிங்கிள்
#Badass #LeoDas is here ma 🔥
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) September 28, 2023
Thanks for the double nuclear blast #Rockstar @anirudhofficial 💥https://t.co/x9bxIOAvX3#LEO 🔥🧊