தந்தையர் தினம்: தனது மகளின் முதல் புகைப்படத்தை வெளியிட்டார் ராம் சரண்
தந்தையர் தினத்தை முன்னிட்டு, நடிகர் ராம் சரண் தனது மகள் கிளின் காராவின் முகத்தை முதன்முறையாக சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். சரண் குழுவைச் சேர்ந்த ஒருவரால் இந்த புகைப்படம் ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ளது. இத்தனை நாள், நடிகர் ராம் சரண் மற்றும் அவரது மனைவி உபாசனா காமினேனி ஆகியோர் தங்கள் மகளின் முகத்தை மக்கள் பார்வையில் இருந்து மறைத்து வைத்திருந்தனர். நடிகர் ராம் சரண் மற்றும் அவரது தொழிலதிபர்-மனைவி உபாசனாவுக்கு கடந்த ஆண்டு ஜூன் 20ஆம் தேதி கிளின் காரா பிறந்தார். ராம் சரண் மற்றும் உபாசனா காமினேனி 2012 இல் திருமணம் செய்துகொண்டார். அவர்களது திருமணத்திற்கு பின் இருந்து 10 ஆண்டுகள் வரை அவர்கள் குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளி போட்டிருந்தனர்.