Page Loader
'கொரோனா குமார்' படத்தில் சிம்புவிற்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறாரா? இணையத்தை கலக்கும் புதிய தகவல்
சிம்புவிற்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறாரா?

'கொரோனா குமார்' படத்தில் சிம்புவிற்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறாரா? இணையத்தை கலக்கும் புதிய தகவல்

எழுதியவர் Venkatalakshmi V
Jan 30, 2023
10:33 am

செய்தி முன்னோட்டம்

'இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தின் மூலம் பிரபலம் அடைந்த இயக்குனர் கோகுலுடன் இணைந்து சிம்பு நடிக்கவிருந்த படம் 'கொரோனா குமார்'. படத்தலைப்பின் அறிவிப்பிற்கு பிறகு, எந்த ஒரு அறிவிப்பும் வெளி வராமல் இருந்த நிலையில், இந்த படத்தை குறித்து ஒரு வதந்தி இணையத்தில் பரவி வருகிறது. 'கொரோனா குமார்' படத்தில், சிம்புவிற்கு பதிலாக 'லவ் டுடே' இயக்குனர்-நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிக்க போகிறார் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவராத நிலையில், யூகங்கள் அடிப்படையில் உலவி வரும் இந்த செய்தி, ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா இடைவேளைக்கு பிறகு, துவங்கவிருந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் விஜய் சேதுபதி. அனால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக, அவர் நடிக்க முடியாமல் போனது.

ட்விட்டர் அஞ்சல்

சிம்புவிற்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன்?