
கவிஞர் வாலியை இழந்து வாடும் கவிஞர் வைரமுத்து; வைரலாகும் ட்விட்டர் பதிவு
செய்தி முன்னோட்டம்
கலைத்துறையில் போட்டியின்றி, ஜெயிக்கவே முடியாது.
ஒரு நடிகர் தனக்கு போட்டியாக யாரையாவது நிர்ணயிக்க வேண்டும். இல்லையேல் ரசிகர்களே அதை உருவாக்கி விடுவார்கள். சினிமாத்துறையில், நிரந்தர நண்பர்களும் இல்லை, எதிரிகளும் இல்லை என்பார்கள்.
அது காலம்காலமாக நடக்கும் ஒரு சம்பிரதாயம் போன்றது.
சிவாஜி-MGR காலம் தொடங்கி, ரஜினி-கமல், அஜித்-விஜய் என தற்போது இருக்கும் இளம் தலைமுறை நடிகர்கள் வரை போட்டி பட்டியல் நீளும்.
அப்படி, கவிதை துறையில், குறிப்பாக சினிமா பாடல்கள் துறையில், கண்ணதாசனின் இறுதி காலத்தில் நுழைந்தவர் கவிஞர் வாலி.
அவர் கோலோச்சிய காலத்தில் வந்தவர் வைரமுத்து. அவர்கள் இருவருக்குள்ளும் தொழில்முறை போட்டி உண்டு என பேச்சுகள் உண்டு.
இந்நிலையில், மறைந்த கவிஞர் வாலிக்காக, வைரமுத்து ட்விட்டரில் ஒரு நெகிழ்ச்சியான பதிவை இட்டுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
வைரமுத்து பதிவு
கமல் இருக்கும் வரை
— வைரமுத்து (@Vairamuthu) March 29, 2023
ரஜினிக்கும்
ரஜினி இருக்கும் வரை
கமலுக்கும்
விஜய் இருக்கும் வரை
அஜித்துக்கும்
அஜித் இருக்கும் வரை
விஜய்க்கும்
ஒரு பிடிமானம் இருக்கும்
எனக்கிருந்த பிடிமானத்தைப்
பிய்த்துக்கொண்டு
போய்விட்டீர்களே
வாலி அவர்களே
காற்றில் கத்தி சுற்றிக்
கொண்டிருக்கிறேன்