ஆஸ்கர் 2027 போட்டி: 104 சர்வதேச திரைப்படங்களின் தகுதி பட்டியலில் இடம்பிடித்த இந்தியாவின் கோந்தல்
செய்தி முன்னோட்டம்
2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 99-வது ஆஸ்கர் (Oscars 2027) விருதுகளுக்கான தகுதிப் பட்டியலை அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் வெளியிட்டுள்ளது. வரலாற்றில் புதிய சாதனையாகச் சர்வதேசத் திரைப்படப் பிரிவில் 104 படங்கள் தகுதி பெற்றுள்ளன. இதில் 100 படங்கள் பல்வேறு நாடுகளின் அதிகாரப்பூர்வப் பரிந்துரைகளாகும். இந்தியா சார்பில் அனுப்பப்பட்ட 'கோந்தல்' திரைப்படம் இதில் இடம் பிடித்துள்ளது. மேலும் கேன்ஸ் விழாவில் 'பாம் டி'ஓர்' வென்ற ருமேனியாவின் 'ஃப்ஜோர்ட்' உள்ளிட்ட படங்களும் போட்டியில் உள்ளன.
சிறந்த படப் பிரிவிலும் வாய்ப்பு
அனிமேஷன் பிரிவில் 38 படங்கள் போட்டி
அனிமேஷன் திரைப்படப் பிரிவில் இந்த ஆண்டு 38 படங்கள் தகுதிப் பட்டியலில் இணைந்துள்ளன.
இதில் 'டாய் ஸ்டோரி 5', 'தி சூப்பர் மாரியோ கேலக்ஸி மூவி', 'ஷான் தி ஷீப்: தி பீஸ்ட் ஆஃப் மோஸி பாட்டம்', ஜப்பானின் 'காஸ்மிக் பிரின்சஸ் ககுயா!' மற்றும் மெக்சிகோவின் 'ஐ ஆம் ஃபிராங்கெல்டா' ஆகிய படங்கள் முக்கிய இடம் பிடித்துள்ளன.
அனிமேஷன் பிரிவு உறுப்பினர்கள் வாக்களித்து 5 படங்களை இறுதிப் போட்டிக்குத் தேர்ந்தெடுப்பார்கள்; மேலும் இப்படங்கள் 'சிறந்த திரைப்படம்' உள்ளிட்ட பிற பிரிவுகளிலும் போட்டியிடத் தகுதி பெற்றுள்ளன.
ஆவணப்பட பிரிவில் 190 படங்கள் சாதனை
100 மில்லியன் டாலர் வசூல் படமும் போட்டி
ஆவணப்படப் பிரிவிலும் புதிய சாதனையாக 190 திரைப்படங்கள் தகுதி பெற்றுள்ளன.
இசை, அரசியல், கலை மற்றும் உண்மைக் குற்றச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இப்பட்டியலில், 'நைஃப்: தி அட்டெம்ப்டட் மர்டர் ஆஃப் சல்மான் ருஷ்டி', 'மஸ்க்', 'எல்விஸ் பிரெஸ்லி இன் கான்சர்ட்' மற்றும் 'தி டிரையல் ஆஃப் அலெக் பால்ட்வின்' ஆகியவை கவனம் ஈர்த்துள்ளன.
குறிப்பாக, உலக அளவில் 100 மில்லியன் டாலர் வசூல் செய்து அரிய சாதனை படைத்த 'யூ கேன் சீ எவ்ரிதிங்' ஆவணப்படமும் இதில் வலுவான போட்டியாளராக உள்ளது.
ஆஸ்கர் விழா
இரு பிரிவுகளிலும் இடம் பிடித்த 14 படங்கள்
'சிட்டிசன் ஒசாமா', 'டிரேசஸ்', 'தி கிரவுண்ட் பினீத் அவர் ஃபீட்' உட்பட 14 திரைப்படங்கள் ஆவணப்படம் மற்றும் சர்வதேசத் திரைப்படம் ஆகிய இரண்டு தகுதிப் பட்டியல்களிலும் ஒரே நேரத்தில் இடம் பிடித்துள்ளன.
அடுத்தகட்டமாக டிசம்பர் 7 முதல் 11 வரை முதற்கட்ட வாக்கெடுப்பு நடைபெற்று, டிசம்பர் 15-ஆம் தேதி இறுதிச் சுருக்கப்பட்டியல் வெளியிடப்படும்.
ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் பரிந்துரைகள் 2027 ஜனவரி 21-ஆம் தேதி அறிவிக்கப்பட்டு, 99-வது ஆஸ்கர் விழா மார்ச் 14, 2027 அன்று ஹாலிவுட்டில் உள்ள டால்பி திரையரங்கில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.