
'இனி 'உலகநாயகன்' வேண்டாம்': அடைமொழிகளை தவிர்க்குமாறு கமல்ஹாசன் திடீர் வேண்டுகோள்
செய்தி முன்னோட்டம்
மக்கள் நீதி மய்யத் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், தனது பிரபலமான 'உலக நாயகன்' போன்ற அடைமொழிகளைத் துறப்பதாக திடீரென அறிவித்துள்ளார்.
மேலும், சினிமா துறையினரும், ஊடகவியலாளர்களும், கட்சியினரும், அரசியல்வாதிகளும், ரசிகர்கள் அனைவரும் அவரை இனி 'கமல்ஹாசன்' அல்லது 'KH' என்று மட்டும் அழைக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் தனது எக்ஸ்சமூகவலைதளத்தில் பகிர்ந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: "எனக்கு ஆழமான நம்பிக்கை இது: கலையை விட கலைஞன் பெரியவன் இல்லை. கற்றல், முன்னேற்றம், உழைப்பு ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டு உயர்வதுதான் எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. அதனால், பல நாட்கள் யோசித்தபின் நான் இந்த முடிவை எடுத்துள்ளேன். 'உலக நாயகன்' போன்ற அடிமொழிகள் மற்றும் பட்டங்களைத் துறப்பது தான் சரியான தீர்வு".
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
உங்கள் நான்,
— Kamal Haasan (@ikamalhaasan) November 11, 2024
கமல் ஹாசன். pic.twitter.com/OpJrnYS9g2
அறிக்கை
இனி நோ ஆண்டவர், நோ உலகநாயகன்!
கமல்ஹாசன் அந்த அறிக்கையில் மேலும், "என் மீது அன்பு கொண்ட அனைவரிடமும் நான் ஒரு வேண்டுகோளை முன்வைக்கின்றேன்: இனி எனை 'கமல்ஹாசன்' அல்லது 'KH' என்று அழைக்கும்படி நான் கேட்டுக் கொள்கிறேன். இது ஒரு மனிதனாக, ஒரு கலைஞனாக, எனது கலை மற்றும் சினிமாவை நேசிக்கும் அனைவருடன் இணைந்திருக்க விரும்புவதைத் தெரிவிக்கும் ஒரு வேண்டுகோள்" எனத்தெரிவித்துள்ளார்.
அதோடு, "இத்தனை காலமாக எனக்கு காட்டிவரும் அன்பிற்கு மீண்டும் நன்றி. எனது இந்த வேண்டுகோளை நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்." என வலியுறுத்தியுள்ளார்.