
வெளியானது கங்குவா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ - நலமா?
செய்தி முன்னோட்டம்
சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா, பாலிவுட் நாயகி திஷா பதானி ஜோடியாக நடித்து வரும் படம் தான் 'காங்குவா'.
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
சரித்திர படமாக உருவாகிவரும் இப்படம் 3டி முறையில் கிட்டத்தட்ட 10 மொழிகளில் வெளியிடப்படவுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ சூர்யாவின் பிறந்தநாளான இன்று(ஜூலை.,23) நள்ளிரவு 12.01க்கு இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மிக பிரம்மாண்டமான காட்சிகளின் அமைப்போடு வெளியாகியுள்ள இந்த க்ளிம்ப்ஸ் வீடியோ சூர்யா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது இந்த வீடியோ இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
க்ளிம்ப்ஸ் வீடியோ
The fearless man.
— Studio Green (@StudioGreen2) July 22, 2023
The wild life.
The powerful story.
Get ready to witness it all...
The King is here 👑#GlimpseOfKanguva OUT NOW
▶ https://t.co/REvjXHt1cS#HappyBirthdaySuriya@Suriya_offl @DishPatani @directorsiva @ThisIsDSP @kegvraja @UV_Creations @saregamasouth… pic.twitter.com/BnJgIyN6x1