பத்மஸ்ரீ செஃப் தாமு காலமானார்; குக் வித் கோமாளி ரசிகர்கள் சோகம்
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தின் பிரபல சமையல் கலைஞரும் சின்னத்திரை நட்சத்திரமுமான செஃப் தாமு எனப்படும் கோதண்டராமன் தாமோதரன் இன்று (அக்டோபர் 25) காலை காலமானார். அவருக்கு வயது 72. உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இச்சம்பவம் சமையல் கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு காலமானார்#ChefDamu #RIPChefDamu #ChefDamuPassesAway #ThanthiTVCinema #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல் pic.twitter.com/R5tbJhXpm7
— Thanthi TV (@ThanthiTV) October 25, 2026
குக் வித் கோமாளி
குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர்
சமையல் கலையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக முத்திரை பதித்த செஃப் தாமு, தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் ஆவார்.
குறிப்பாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராகப் பங்கேற்று, தனது நகைச்சுவையான பேச்சாலும் அன்பான அணுகுமுறையாலும் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தார்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் முன்னணி சின்னத்திரை பிரபலமாக விளங்கிய இவர், பலருக்கு சமையல் துறையில் ஊக்கமாகத் திகழ்ந்தார்.
கின்னஸ் சாதனை
கின்னஸ் சாதனைகள் மற்றும் பத்மஸ்ரீ விருது பெற்ற மகத்தான கலைஞர்
சமையல் கலைத் துறையில் பல்வேறு உலக சாதனைகளைப் படைத்த செஃப் தாமு, மிக நீண்ட நேரம் தொடர்ந்து சமையல் செய்து கின்னஸ் உலக சாதனையும் படைத்துள்ளார்.
இவருடைய சமையல் கலைச் சேவையையும் தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவுகளை உலகறியச் செய்த பங்களிப்பையும் பாராட்டி, மத்திய அரசு 2025 ஆம் ஆண்டு இவருக்கு உயரிய பத்மஸ்ரீ விருதை வழங்கி கௌரவித்தது.
பல தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை வென்றுள்ள இவர் தமிழ் உணவு கலாச்சாரத்தின் அடையாளமாகத் திகழ்ந்தார்.
ஆழ்ந்த இரங்கல்
திரையுலகினர் மற்றும் ரசிகர்களின் ஆழ்ந்த இரங்கல் அஞ்சலி
முன்னதாகக் கடந்த ஆகஸ்ட் மாதம் செஃப் தாமு காலமானதாக சமூக வலைத்தளங்களில் போலி வதந்திகள் பரவிய போது, அவரே வீடியோ வெளியிட்டுத் தான் நலமுடன் இருப்பதாக விளக்கமளித்திருந்தார்.
ஆனால் தற்பொழுது அவர் உண்மையிலேயே காலமான செய்தி கேட்டுத் திரையுலகப் பிரபலங்கள், சமையல் கலைஞர்கள் மற்றும் கோடிக்கணக்கான குக் வித் கோமாளி ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.