நடிகர் சத்யராஜிற்கும், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு தீரா பகை இருந்தது எத்தனை பேருக்கு தெரியும்
ரஜினிகாந்த், 'ஜெயிலர்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசியதையடுத்து, தமிழ் சினிமாவில் அடுத்த 'சூப்பர்ஸ்டார்' இடத்தை நிரப்ப போவது யார் என சமூகவலைதளங்களில் ரசிகர்கள் முட்டிக்கொண்டனர். அப்போது, நடிகர் சத்யராஜ், "என்றென்றும் சூப்பர்ஸ்டார், ரஜினிகாந்த் மட்டுமே" எனக்கூறிய வீடியோ ஒன்று வெளியானது. அதை பார்த்த பலர் ஆச்சரியப்பட்டார்கள். காரணம், இவர்கள் இருவருக்கும் தீராப்பகை இருந்தது சினிமா வட்டாரத்தை நன்கு அறிந்தவர்களுக்கு தெரியும். எப்படி துவங்கியது இந்த பனி போர் என சமீபத்தில், ஒரு பத்திரிகையாளர் யூ-ட்யூப் வீடியோவில் வெளியிட்டார். அதன்படி, ஆரம்பகாலத்தில், 'தம்பிக்கு எந்த ஊரு' படத்தில், ரஜினி மற்றும் சத்யராஜ் இருவருக்குமான காட்சிகள் இருந்தனவாம். ரஜினிகாந்த் ஷூட்டிங் ஸ்பாட்டில் கலாட்டா செய்து கொண்டே இருப்பாராம், மாறாக சத்யராஜ் அமைதியாக, ஓரமாக அமர்ந்திருப்பாராம்.
சத்யராஜை தர்மசங்கடத்தில் ஆழ்த்திய ரஜினி
அந்த படத்தின் நாயகி, மாதவிக்கு, சத்யராஜ்-ஐ தெரியாத காரணத்தால், அவர் யார் என ரஜினியிடம் கேட்க, ரஜினியோ,"அவர் அமெரிக்காவில் பெரிய ஆராய்ச்சியாளர்" எனக்கூற, மாதவியும் சத்யராஜிடம் ஆங்கிலத்திலேயே உரையாட, அவர் தர்மசங்கடமாக நெளிந்துள்ளார். அதன் பின்னர் யாரோ வந்து, மாதவியிடம் உண்மையை கூற, அவர் சிறித்து விட்டாராம். அப்போது தொடங்கிய இந்த மோதல், 'Mr.பாரத்' படத்தின் போது முற்றியதாம். நீளம் காரணமாக, சத்யராஜின் சில காட்சிகள் நீக்கப்பட, அவை ரஜினி கூறி தான் நீக்கப்பட்டதாக யாரோ சத்யராஜிடம் கொளுத்தி போட, அன்றிலிருந்து, ரஜினி படத்தில் அவர் நடிப்பதில்லை என முடிவெடுத்து விட்டதாக அந்த மூத்த பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார். தற்போது பழசை மறந்து சத்யராஜ் பேசியிருப்பது, பலருக்கும் ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறதாக அவர் குறிப்பிட்டார்.