கஸ்டடி படத்திற்கு வெங்கட் பிரபு குழு வெளியிட்டிருக்கும் புதிய ப்ரோமோ, வைரலாகிறது
கோலிவுட்டில் இருக்கும் இளம்தலைமுறை இயக்குனர்களில் வெங்கட் பிரபுவிற்கு நிச்சயம் இடம் உண்டு. அவர், தற்போது தெலுங்கு நடிகரும், சமந்தாவின் முன்னாள் கணவருமான நாகசைதன்யாவை வைத்து 'கஸ்டடி' என்ற படத்தை இயக்கி உள்ளார். அந்த திரைப்படம் அடுத்த மாதம் வெளிவர போவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், படத்தின் ப்ரோமோஷனுக்காக ஒரு வீடியோவை படக்குழுவும், வெங்கட்பிரபுவும் வெளியிட்டுள்ளனர். வெங்கட் பிரபு ஒரு தீவிர CSK பேன் என்பது பலரும் அறிந்திருப்பார்கள். தற்போது நடைபெறும் IPL போட்டிகளையும், படத்தையும் இணைத்து ஒரு ப்ரோமோ வீடியோ, வெங்கட் பிரபு ஸ்டைலில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில், வெங்கட் பிரபு, ஹீரோ நாக சைதன்யா ஆகியோருடன், பிரேம்ஜியும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கஸ்டடி படத்தின் புதிய ப்ரோமோ
The battle continues tomorrow at 6:30pm on Jio cinema!! In both tamil and telugu!! @chay_akkineni https://t.co/TpsP1bDtx7#Custody #CustodyOnMay12— venkat prabhu (@vp_offl) April 20, 2023