2022-ல் தமிழில் வெளிவந்த டாப் 5 வெப் சீரிஸ்
2022-ல் 60க்கும் மேற்பட்ட படங்கள் திரையரங்களில் வெளிவந்தன. மேலும் நிறைய படங்கள் ஓடிடி தளத்திலும் வெளியாகின. அதில் சில படங்கள் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. படங்களை போலவே இந்த வருடம் வலைத்தொடர்களும் அதிகமாகவே வெளிவந்தன. அப்படி வெளிவந்த வலைத்தொடர்களில் சிறந்த வலைத்தொடர்களை பற்றி பார்ப்போம். பிரஷாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் க்ரைம் த்ரில்லராக வெளிவந்த வலைத்தொடர் விலங்கு. இந்த வலைத்தொடரில் விமல், இனியா, பால சரவணன் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்தொடர் ஜீ5 ஓடிடி தளத்தில் இந்த வெளியானது. அடுத்தாக கிருத்திகா உதயநிதி இயக்கிய பேப்பர் போட் வலைத்தொடர். இத்தொடரில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் தன்யா போன்றோர் நடித்துள்ளனர். இத்தொடர் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியானது.
மக்கள் மனதை கவர்ந்த 'க்ரைம் த்ரில்லர் வெப் சீரிஸ்'
ஈரம், குற்றம் 23 போன்ற வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் அறிவழகன். இவர் இயக்கி, அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த வலைத்தொடர் தமிழ் ராக்கர்ஸ். க்ரைம் த்ரில்லராக வெளிவந்த இத்தொடர் சோனி லிவ் ஓடிடி வெளியானது. புஷ்கர் மற்றும் காயத்ரி எழுதி தயாரித்த வலைத்தொடர் சூழல். இதனை பிரம்மா மற்றும் அருண்சரண் இயக்கியுள்ளனர். இத்தொடரில் ஐஸ்வர்யா ராஜேஷ், கதிர், பார்த்திபன், ஸ்ரேயா ரெட்டி, ஆகியோர் நடித்துள்ளனர். இத்தொடர் அமோசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. புஷ்கர் மற்றும் காயத்ரி எழுதி தயாரித்த அடுத்த வலைத்தொடர் வதந்தி. இந்தத் தொடரை ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கியுள்ளார். எஸ்.ஜே.சூர்யா, லைலா, நாசர், ஆகியோர் இத்தொடரில் நடித்துள்ளனர். இத்தொடர் அமோசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.