தீபாவளிக்கு வெளியாகும் அப்பா குட்டி: தந்தை - மகள் பாசக் கதையுடன் வரும் விஜய் ஆண்டனி
செய்தி முன்னோட்டம்
தமிழ் திரையுலகில் தொடர்ச்சியாக வித்தியாசமான கதைக் களங்களைத் தேர்வு செய்து நடித்து வரும் விஜய் ஆண்டனி, இந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குடும்ப ரசிகர்களைக் கவரும் வகையில் புதிய திரைப்படத்துடன் களமிறங்குகிறார். இயக்குநர் மு. மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அப்பா குட்டி' திரைப்படம் வரும் நவம்பர் 6, 2026 அன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். முன்னதாக அக்டோபர் 16 அன்று வெளியாகவிருந்த இப்படம், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 6-க்கு மாற்றப்பட்டுள்ளது.
பாக்ஸ் ஆபிஸ் போட்டி
சூடுபிடிக்கும் தீபாவளி பாக்ஸ் ஆபிஸ் போட்டி
அப்பா குட்டி திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதன் மூலம் இந்த ஆண்டு தீபாவளி பாக்ஸ் ஆபிஸ் களம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே பண்டிகை வெளியீடாக அறிவிக்கப்பட்டுள்ள சூர்யாவின் சீன் மற்றும் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2 ஆகிய பிரம்மாண்ட திரைப்படங்களுடன் விஜய் ஆண்டனியின் 'அப்பா குட்டி' நேரடியாக மோதவுள்ளது.
முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் ஒரே நேரத்தில் திரைக்கு வருவதால், பண்டிகை காலத் திரையரங்கு வியாபாரமும் ரசிகர்களின் கவனமும் பெரும் விறுவிறுப்பைப் பெற்றுள்ளது.
இறுதிக்கட்டப் பணிகள் நிறைவு
அப்பா - மகள் பாசப் பிணைப்பும் ஆக்ஷனும்
'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படப்புகழ் மு. மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அப்பா குட்டி' திரைப்படம், தந்தை மற்றும் மகளுக்கு இடையிலான ஆழமான பாசப் பிணைப்பை மையமாகக் கொண்டுள்ளது.
இதில் விஜய் ஆண்டனி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிப்பதோடு, இசை மற்றும் படத்தொகுப்பையும் மேற்கொண்டுள்ளார். அவருடன் ப்ரீத்தி அஸ்ரானி, பேபி லிதன்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், திரையரங்கு வெளியீட்டை முன்னிட்டு விளம்பரப் பணிகள் தொடங்குகின்றன.
கமர்ஷியல் ஆக்ஷன் மற்றும் குடும்ப சென்டிமென்ட் கலந்த இத்திரைப்படம், தீபாவளி பண்டிகைக்குக் குடும்பத்தோடு கண்டுகளிக்கும் சிறந்த விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.