Page Loader
நடிகை கனகா பற்றி மனம் திறந்து பேட்டியளித்த குட்டி பத்மினி
நடிகை கனகா பற்றி மனம் திறந்து பேட்டியளித்த குட்டி பத்மினி

நடிகை கனகா பற்றி மனம் திறந்து பேட்டியளித்த குட்டி பத்மினி

எழுதியவர் Venkatalakshmi V
Dec 21, 2023
07:00 pm

செய்தி முன்னோட்டம்

பழம்பெரும் நடிகை குட்டி பத்மினி, தன்னுடைய KPYtv மூலமாக பிரபல நடிகர்களை பற்றி தகவல்கள் பகிர்ந்து வருவதுண்டு. ஒரு சில நேரங்களில், திரை துறையை விட்டு விலகி உள்ள நடிகர்-நடிகைகளையும் தேடி பிடித்து பேட்டி எடுப்பார் அவர். அந்த வகையில் சில நாட்களுக்கு முன்னர் 'கரகாட்டக்காரன்' கனகாவை கண்டதாகவும், அவர் நலமுடன் இருப்பதாக தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து, அவர் கனகாவின் பேட்டி ஏதேனும் வெளியிடுவார் என பலரும் எதிர்பார்த்த நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. அதில், கனகா பாழடைந்த வீடு ஒன்றில் வாழ்வதாகவும், வெளி நபர்கள் யாரையும் அவர் சந்திப்பதில்லை எனவும் கூறி உள்ளார். மேலும் தன்னுடைய அழைப்புகளை கனகா ஏற்பதில்லை எனவும் கூறியுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

குட்டி பத்மினி பேட்டி 

ட்விட்டர் அஞ்சல்

குட்டி பத்மினி பேட்டி