
'ஜிகர்தண்டா XX' திரைப்படம் குறித்து நடிகர் பார்த்திபனின் உருக்கமான பதிவு
செய்தி முன்னோட்டம்
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், SJ சூர்யா, ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'ஜிகர்தண்டா XX' திரைப்படம்,
தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
75களில் ஹீரோவாக துடிக்கும் ஒரு டானின் கதையாக, இப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் உருவாக்கியுள்ளார்.
8 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான 'ஜிகர்தண்டா' திரைப்படம் பெரும் வெற்றியினை பெற்ற நிலையில், நீண்ட இடைவெளிக்கு பின்னர் இப்படத்தின் 2ம் பாகம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.
பல சினிமா பிரபலங்களும் இப்படம் குறித்து பாசிட்டிவான கருத்துக்களையே கூறி வருகிறார்கள்.
பார்த்திபன்
படம் குறித்த தனது கருத்தினை பதிவு செய்த பார்த்திபன்
அந்த வகையில் நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் இப்படத்தினை திரையரங்கில் பார்த்துவிட்டு அதுகுறித்த கருத்தினை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
அதில் அவர், "ஜிகர்தண்டா-3 முதல் நாள் முதல் ஷோ பார்த்தேன் என என்றாவது ஒருநாள் நான் பதிவிடுவேன். அதற்கு காரணம் ஜிகர்தண்டா-2" என்று கூறியுள்ளார்.
அதனை தொடர்ந்து அவர், "நான் விமர்சகன் அல்ல, நிறை குறை சொல்ல" என்றும்,
"தெரியாமல் போய், போன இடத்தில் பிடித்து கொண்டால் அதன் பெயர் பேய். நான் தெரிந்தே கார்த்திக் சுப்புராஜ் என்னும் பேயினை பிடித்து தானே படத்திற்கே போனேன். நினைத்தபடி மனதை உலுக்கி விட்டது" என்றும் கூறியுள்ளார்.
மேலும் அவர், 'திரையரங்குகளில் வெடித்த கைதட்டல்களை தீபாவளி பட்டாசாக நினைத்து ரசித்தேன்' என்றும் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
பார்த்திபனின் பதிவு
Good afternoon friends
— Radhakrishnan Parthiban (@rparthiepan) November 11, 2023
Jigarthanda -3’
பார்த்தேன் -FDFS
என என்றாவது ஒரு நாள் நான் பதிவிடுவேன். காரணம்… ஜிகர்தண்டா -2 !
நான் விமர்சகன் அல்ல.
நிறை குறை சொல்ல!
தெரியாமல் போய்,போன இடத்தில் பிடித்து விட்டால்
அதன் பெயர் பேய்!
இது கார்த்திக் சுப்புராஜ் என்ற பேயை பிடித்து போய் தானே… pic.twitter.com/A0endPpiXG