இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயர்கிறதா?
செய்தி முன்னோட்டம்
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் தொடர்ந்து வரும் நிலையில், கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வைச் சந்தித்து வருகிறது. இதனால் உலக அளவில் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இந்தியாவிலும் பெட்ரோல் டீசல் விலை உயருமா என்ற அச்சம் மக்களிடையே எழுந்திருக்கிறது. இது தொடர்பாக அரசுத் தரப்பிலிருந்து சில தகவல்கள் கிடைத்திருக்கின்றன. அதன்படி இந்தியாவில் தற்போது தேவையைச் சமாளிக்கும் வகையில் போதிய அளவில் பெட்ரோல் டீசல் இருப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உடனடியாக பெட்ரோல் டீசல் விலைகள் உயருமோ என மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.
பெட்ரோல்
எப்போது உயரும்?
சர்வதேச சந்தையில் தற்போது கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 120 அமெரிக்க டாலர்களை வரை எட்டியிருக்கிறது. ஆனால் ட்ரம்ப் நேற்று வெளியிட்ட சில அறிவிப்புகளைத் தொடர்ந்து மீண்டும் குறையவும் செய்திருப்பதை நாம் கவனிக்க வேண்டும். கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 130 அமெரிக்க டாலர்களைக் கடக்கும் போது தான் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் குறித்து நாம் கவலைப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரங்களை வைத்துப் பார்க்கும் போது 100 டாலர்களை ஒட்டிய அளவிலேயே கச்சா எண்ணெய் விலை நிலை கொண்டிருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் பதற்றமடைய வேண்டியதில்லை.