LOADING...
புதிய லக்கேஜ் விதிகள் 2026: வெளிநாட்டு பயணிகளுக்கான வரி இல்லாத வரம்பு அதிகரிப்பு
புதிய Baggage Rules, 2026 பிப்ரவரி 2 நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளன

புதிய லக்கேஜ் விதிகள் 2026: வெளிநாட்டு பயணிகளுக்கான வரி இல்லாத வரம்பு அதிகரிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Feb 02, 2026
06:21 pm

செய்தி முன்னோட்டம்

மத்திய அரசு பத்து ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவின் லக்கேஜ் விதிகளை மாற்றியமைத்துள்ளது. புதிய Baggage Rules, 2026 பிப்ரவரி 2 நள்ளிரவு முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளன. புதிய விதிப்படி, விமானம் அல்லது கடல் வழியாக இந்தியாவிற்கு வரும் இந்திய குடியிருப்பாளர்கள் மற்றும் இந்திய வம்சாவளி சுற்றுலா பயணிகள் (Tourists of Indian Origin), இனி ₹75,000 மதிப்புள்ள பொருட்களை வரி ஏதுமின்றி கொண்டு வரலாம். இதற்கு முன் இந்த வரம்பு ₹50,000 ஆக இருந்தது. இந்த சலுகை தனிப்பட்ட பயன்பாட்டிற்கான பொருட்களுக்கு மட்டுமே பொருந்தும்.

மாற்றங்கள்

முக்கிய மாற்றங்கள் மற்றும் வரம்புகள்

இதே விலக்கு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான வரி இல்லாத வரம்பு ₹15,000-லிருந்து ₹25,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு ஆண்டிற்கும் மேலாக வெளிநாட்டில் வசித்துவிட்டு தாயகம் திரும்பும் இந்தியர்களுக்கான நகை வரம்புகளும் மாற்றப்பட்டுள்ளன: பெண் பயணிகள்: 40 கிராம் வரை வரி இல்லாத தங்க நகைகள். ஆண் பயணிகள் மற்றும் இதர பிரிவினர்: 20 கிராம் வரை வரி இல்லாத தங்க நகைகள் எடுத்து வரலாம்.

இதர அறிவிப்புகள்

சுங்க வரி உள்ளிட்ட இதர அறிவிப்புகள்

லேப்டாப்கள்: 18 வயதிற்கு மேற்பட்ட பயணிகள் ஒரு புதிய லேப்டாப் அல்லது நோட்பேடை எவ்வித வரியுமின்றி கொண்டு வரலாம். குறைக்கப்பட்ட வரி: நிர்ணயிக்கப்பட்ட வரம்பிற்கு மேல் பொருட்கள் கொண்டு வரப்பட்டால், அதற்கான சுங்க வரி 20%-லிருந்து 10%-ஆக குறைக்கப்பட்டுள்ளது. விமானப் பணியாளர்கள்: சர்வதேச விமானங்களில் பணியாற்றும் ஊழியர்கள் ₹2,500 மதிப்புள்ள பரிசுப் பொருட்களை வரி இன்றி கொண்டு வர அனுமதிக்கப்படுவார்கள். இருப்பினும், துப்பாக்கிகள், 100-க்கும் மேற்பட்ட சிகரெட்டுகள், 2 லிட்டருக்கு அதிகமான மதுபானம் மற்றும் தொலைக்காட்சிகள் (TV) போன்ற பொருட்களுக்கு இந்த வரிவிலக்கு பொருந்தாது.

Advertisement