LOADING...
ரிலையன்ஸ் பங்குகள் சரிவு, 3 லட்சம் கோடி ரூபாய் காலி!
ரிலையன்ஸ் பங்கு சரிவு

ரிலையன்ஸ் பங்குகள் சரிவு, 3 லட்சம் கோடி ரூபாய் காலி!

எழுதியவர் Prasanna
Mar 13, 2026
01:04 pm

செய்தி முன்னோட்டம்

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ரிலையன்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் 3 லட்சம் கோடி ரூபாய் வரை சரிந்துள்ளது. இந்தியாவின் மிகவும் நம்பப்படும் பங்காகக் கருதப்படும் ரிலையன்ஸ், குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது சந்தை வல்லுநர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச அளவில் நிலவும் பொருளாதாரச் சூழல் மற்றும் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள ஏற்ற இறக்கங்கள் ரிலையன்ஸின் எண்ணெய் மற்றும் ரசாயன பிரிவைப் பாதித்துள்ளன. ஒட்டுமொத்த இந்தியச் சந்தையில் இருந்து வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளைத் திரும்பப் பெற்று வருவது ரிலையன்ஸ் போன்ற பெரிய நிறுவனப் பங்குகளிலும் எதிரொலிக்கிறது.

பங்குச்சந்தை

காலாண்டு முடிவுகளும் சிறப்பாக இல்லை

சமீபத்திய நிதிநிலை அறிக்கையில் எதிர்பார்த்த லாபத்தை விடச் சற்றே குறைவாகப் பதிவு செய்தது முதலீட்டாளர்களின் நம்பிக்கையைத் தற்காலிகமாகக் குறைத்துள்ளது. சுமார் 3 லட்சம் கோடி ரூபாய் மதிப்பு துடைத்தெறியப்பட்ட போதிலும், பல சந்தை நிபுணர்கள் ரிலையன்ஸ் பங்கை இன்னும் ஒரு 'Value Bet' என்றே கருதுகின்றனர். ஜியோ மற்றும் ரீடைல் துறைகளில் நிறுவனம் காட்டி வரும் அசுர வளர்ச்சி, நீண்ட கால அடிப்படையில் மீண்டும் ஒரு வலுவான மீட்சியைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய விலைச் சரிவை ஒரு வாய்ப்பாகக் கருதி நீண்ட கால முதலீட்டாளர்கள் பங்குகளைச் சேர்க்கலாம் என்று சில தரகு நிறுவனங்கள் பரிந்துரைக்கின்றன. இருப்பினும், தற்போதைய சந்தை ஏற்ற இறக்கங்களைக் கவனித்து நிதானமாக முடிவெடுப்பது அவசியமாகும்.

Advertisement