LOADING...
தமிழகத்தின் அடையாளமான 'உதயம்' பிராண்டை வாங்கியது ரிலையன்ஸ்
'உதயம்' பிராண்டை வாங்கியது ரிலையன்ஸ்

தமிழகத்தின் அடையாளமான 'உதயம்' பிராண்டை வாங்கியது ரிலையன்ஸ்

எழுதியவர் Venkatalakshmi V
Dec 19, 2025
11:00 am

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தின் சமையலறைகளில் நீங்கா இடம்பெற்றுள்ள 'உதயம்' (Udhaiyam) பருப்பு மற்றும் மளிகைப் பொருட்கள் பிராண்டை, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் புரோடக்ட்ஸ் (RCPL) நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது. தமிழகத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் 'உதயம் அக்ரோ ஃபுட்ஸ்' நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை வாங்கியுள்ளதாக ரிலையன்ஸ் நிறுவனம் நேற்று (டிசம்பர் 18) அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த ஒப்பந்தத்தின்படி, ரிலையன்ஸ் நிறுவனம் பெரும்பான்மை பங்குகளையும், உதயத்தின் தற்போதைய உரிமையாளர்கள் சிறுபான்மை பங்குகளையும் வைத்திருப்பார்கள். நிறுவனத்தின் தற்போதைய உரிமையாளர்களான எஸ். சுதாகர் மற்றும் எஸ். தினகர் ஆகியோர் தொடர்ந்து நிர்வாகத்தில் பங்கு வகிப்பார்கள்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

பங்கு விற்பனை 

ஏன் இந்த கையகப்படுத்துதல்?

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பருப்பு வகைகள், சர்க்கரை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட தயாரிப்பில் 'உதயம்' பிராண்ட் தமிழகத்தில் முன்னோடியாக உள்ளது. தமிழகத்தின் பாரம்பரிய பிராண்டான உதயத்தை, ரிலையன்ஸ் தனது வலுவான விநியோகக் கட்டமைப்பு மூலம் இந்தியா முழுவதும் கொண்டு செல்லத் திட்டமிட்டுள்ளது. தரமான மளிகைப் பொருட்களை மலிவான விலையில் சாமானிய மக்களிடம் கொண்டு சேர்ப்பதே இந்த ஒப்பந்தத்தின் நோக்கம் என ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது. இது குறித்து ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் புரோடக்ட்ஸ் இயக்குநர் டி. கிருஷ்ணகுமார் கூறுகையில்: "தமிழகத்தின் செழுமையான பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் 'உதயம்' பிராண்டுக்கு அறிமுகம் தேவையில்லை. தசாப்தங்களாக ஆரோக்கியமான உணவுத் தேர்வுகளை வழங்கி வரும் இந்த பிராண்டுடன் இணைவது, பிராண்டட் மளிகைப் பொருட்கள் சந்தையில் ரிலையன்ஸின் நிலையை மேலும் வலுப்படுத்தும்."

Advertisement