LOADING...
ஒரே நாளில் ரூ.2,800 அதிகரித்தது தங்கத்தின் விலை; சவரன் விலை என்ன?
தங்க விலை, புதன்கிழமை (மார்ச் 25) மீண்டும் அதிகரித்துள்ளது

ஒரே நாளில் ரூ.2,800 அதிகரித்தது தங்கத்தின் விலை; சவரன் விலை என்ன?

எழுதியவர் Venkatalakshmi V
Mar 25, 2026
11:26 am

செய்தி முன்னோட்டம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் தங்க விலை, புதன்கிழமை (மார்ச் 25) மீண்டும் அதிகரித்துள்ளது. புதன்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹350 அதிகரித்து ₹13,600 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹2,800 அதிகரித்து ₹1,08,800 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹381 அதிகரித்து ₹14,837 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹3,048 அதிகரித்து ₹1,18,696 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலை அதிகரித்தது

18 காரட் தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது. அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹300 அதிகரித்து ₹11,350 ஆகவும், ஒரு சவரன் ₹2,400 அதிகரித்து ₹90,800 ஆகவும் விற்கப்படுகிறது. இதற்கிடையே புதன்கிழமை வெள்ளி விலை அதிகரித்துள்ளது. வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹10 அதிகரித்து ₹260.00 ஆகவும், ஒரு கிலோ ₹2,60,000 ஆகவும் விற்பனை ஆகிறது. ஈரான் -அமெரிக்கா - இஸ்ரேல் இடையிலான போருக்கு மத்தியில் பங்குச் சந்தைகள் சரிவை சந்தித்து வரும் நிலையில், தங்கம் வெள்ளி விலையும் அதிரித்துள்ளது முதலீட்டாளர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement