தங்கம் வெள்ளி விலைகள் மீண்டும் சரமாரி சரிவு; இன்றைய விலை நிலவரம் என்ன?
செய்தி முன்னோட்டம்
சமீப காலமாக தொடர்ந்து ஏற்றத்தில் இருக்கும் தங்க விலை, திங்கட்கிழமை (பிப்ரவரி 2) மீண்டும் கடுமையாக சரிந்துள்ளது. திங்கட்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹950 குறைந்து ₹13,950 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹7,600 குறைந்து ₹1,11,600 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹1,037 குறைந்து ₹15,218 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹8,296 குறைந்து ₹1,21,744 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலையும் கடும் சரிவு
18 காரட் தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹800 குறைந்து ₹12,000 ஆகவும், ஒரு சவரன் ₹6,400 குறைந்து ₹96,000 ஆகவும் விற்கப்படுகிறது. இதற்கிடையே வெள்ளி விலையும் திங்கட்கிழமை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹20 குறைந்து ₹300.00 ஆகவும், ஒரு கிலோ ₹3,00,000 ஆகவும் விற்பனை ஆகிறது. சர்வதேச சூழல் போன்ற காரணிகளால் தங்கம் வெள்ளி விலைகளில் தொடர்ந்து நிலையற்ற தன்மை நீடிக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.