LOADING...
குறைந்தது சவரன் விலை; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்
மே 20 தங்க விலை சற்றே குறைந்துள்ளது

குறைந்தது சவரன் விலை; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

எழுதியவர் Venkatalakshmi V
May 20, 2026
12:28 pm

செய்தி முன்னோட்டம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், புதன்கிழமை (மே 20) தங்க விலை சற்றே குறைந்துள்ளது. அதன்படி, புதன்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹120 குறைந்து ₹14,750 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹960 குறைந்து ₹1,18,000 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹131 குறைந்து ₹16,091 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,048 குறைந்து ₹1,28,728 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையும் குறைந்துள்ளது

18 காரட் தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹75 குறைந்து ₹12,335 ஆகவும், ஒரு சவரன் ₹600 குறைந்து ₹98,680 ஆகவும் விற்கப்படுகிறது. இதற்கிடையே புதன்கிழமை வெள்ளி விலையும் குறைந்துள்ளது. வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹15 குறைந்து ₹285 ஆகவும், ஒரு கிலோ ₹285,000 ஆகவும் விற்பனை ஆகிறது. அமெரிக்கா -ஈரான் போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தாலும், சர்வதேச சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தங்கம் வெள்ளி விலைகளில் தொடர்ந்து நிலையற்ற தன்மை நீடிக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கணித்துள்ளனர்.

Advertisement