Loading...
ஆறுதல் தரும் தங்கத்தின் விலை; நேற்றைக்கு ஏறிய நிலையில் இன்று குறைந்தது சவரன் விலை
தங்கத்தின் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது

ஆறுதல் தரும் தங்கத்தின் விலை; நேற்றைக்கு ஏறிய நிலையில் இன்று குறைந்தது சவரன் விலை

எழுதியவர் Venkatalakshmi V
Sep 02, 2026
11:43 am

செய்தி முன்னோட்டம்

நேற்று விலை அதிகரித்த நிலையில் தங்கத்தின் விலை இன்று மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி, புதன்கிழமை (செப்டம்பர் 2), சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹240 குறைந்து ₹13,935 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,920 குறைந்து ₹1,11,480 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹262 குறைந்து ₹15,202 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹2,096 குறைந்து ₹1,21,616 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலை குறைந்துள்ளது

18 காரட் தங்கத்தின் விலையும் இன்று குறைந்துள்ளது.

அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹225 குறைந்து ₹11,720 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

18 கேரட் தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1800 குறைந்து ₹93,760 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

இதற்கிடையே புதன்கிழமை வெள்ளி விலை குறைந்துள்ளது.

வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹5 குறைந்து ₹250 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஒரு கிலோ வெள்ளி ₹2,50,000 ஆக விற்கப்படுகிறது.

ADVERTISEMENT