Loading...
தங்கத்தின் விலை மீண்டும் ஏற்றத்தில்; இன்றைய சவரன் விலையை தெரிந்து கொள்ளுங்கள்
தங்கத்தின் விலை இன்றும் அதிகரித்துள்ளது

தங்கத்தின் விலை மீண்டும் ஏற்றத்தில்; இன்றைய சவரன் விலையை தெரிந்து கொள்ளுங்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Nov 24, 2026
12:14 pm

செய்தி முன்னோட்டம்

தொடர்ந்து இரண்டு வாரங்களாக கடும் வீழ்ச்சியை சந்தித்து வந்த தங்கத்தின் விலை, நேற்றை தொடர்ந்து இன்றும் அதிகரித்துள்ளது. அதன்படி, செவ்வாய்கிழமை (நவம்பர் 24), சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹115 அதிகரித்து ₹11,715 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹920 அதிகரித்து ₹93,720 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹124 அதிகரித்து ₹12,780 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹992 அதிகரித்து ₹1,02,240 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையில் மாற்றமில்லை

18 காரட் தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது.

அதன்படி 18 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹90 அதிகரித்து ₹9,585 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹720 அதிகரித்து ₹76,680 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

இதற்கிடையே செவ்வாய்கிழமை வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் முந்தைய நாள் விலையிலேயே நீடிக்கிறது.

வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹175.00 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ வெள்ளி ₹1,75,000 ஆக விற்கப்படுகிறது.

ADVERTISEMENT