LOADING...
இரண்டு நாள் இறக்கத்திற்கு பிறகு மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன?
இரண்டு நாள் இறக்கத்திற்கு பிறகு மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை

இரண்டு நாள் இறக்கத்திற்கு பிறகு மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன?

எழுதியவர் Sekar Chinnappan
Feb 14, 2026
09:52 am

செய்தி முன்னோட்டம்

சமீப காலமாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருக்கும் தங்க விலை, சனிக்கிழமை (பிப்ரவரி 14) அதிகரித்துள்ளது. சனிக்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹160 அதிகரித்து ₹14,560 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,280 அதிகரித்து ₹1,16,480 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹175 அதிகரித்து ₹15,884 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,400 அதிகரித்து ₹1,27,072 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலை நிலவரம்

18 காரட் தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது. அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹50 அதிகரித்து ₹12,450 ஆகவும், ஒரு சவரன் ₹400 அதிகரித்து ₹99,600 ஆகவும் விற்கப்படுகிறது. இதற்கிடையே வெள்ளி விலையில் சனிக்கிழமை எந்த வித மாற்றமும் ஏற்படவில்லை. வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹280.00 ஆகவும், ஒரு கிலோ ₹2,80,000 ஆகவும் விற்பனை ஆகிறது. சர்வதேச சூழல் போன்ற காரணிகளால் தங்கம் வெள்ளி விலைகளில் தொடர்ந்து நிலையற்ற தன்மை நீடிக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

Advertisement