LOADING...
ஷாக்! ஒரே நாளில் ₹20,000 அதிகரித்த வெள்ளி விலை; அப்போ தங்கம்?
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

ஷாக்! ஒரே நாளில் ₹20,000 அதிகரித்த வெள்ளி விலை; அப்போ தங்கம்?

எழுதியவர் Sekar Chinnappan
Dec 27, 2025
10:11 am

செய்தி முன்னோட்டம்

சமீப காலமாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருக்கும் தங்க விலை, இந்த வாரம் முழுவதுமே விலை உயர்வை சந்தித்து வரும் நிலையில், சனிக்கிழமை (டிசம்பர் 27) மீண்டும் அதிகரித்துள்ளது. சனிக்கிழமை சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹110 அதிகரித்து ₹13,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹880 அதிகரித்து ₹1,04,000 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹120 அதிகரித்து ₹14,182 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹960 அதிகரித்து ₹1,13,456 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலை நிலவரம்

18 காரட் தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது. அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹90 அதிகரித்து ₹10,850 ஆகவும், ஒரு சவரன் ₹720 அதிகரித்து ₹86,800 ஆகவும் விற்கப்படுகிறது. இதற்கிடையே வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. வெள்ளி விலை இன்றைய நிலவரப்படி ஒரு கிராம் ₹20 அதிகரித்து ₹274.00 ஆகவும், ஒரு கிலோ ₹20,000 அதிகரித்து ₹2,74,000 ஆகவும் விற்பனை ஆகிறது. திருமண சீசன் மற்றும் சமீபத்திய அமெரிக்க வட்டி விகித குறைப்பு அறிவிப்பு போன்ற காரணிகளால் தங்கம் வெள்ளி விலைகளில் தொடர்ந்து விலையேற்றம் ஏற்படலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

Advertisement