LOADING...
மாதத்தின் முதல் நாளில் நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஆறுதல் கொடுத்த தங்கம் விலை; இன்றைய நிலவரம்
ஜூலை 1 தங்க விலை குறைந்துள்ளது

மாதத்தின் முதல் நாளில் நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஆறுதல் கொடுத்த தங்கம் விலை; இன்றைய நிலவரம்

எழுதியவர் Venkatalakshmi V
Jul 01, 2026
11:21 am

செய்தி முன்னோட்டம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், புதன்கிழமை (ஜூலை 1) தங்க விலை குறைந்துள்ளது. அதன்படி, புதன்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹100 குறைந்து ₹13,100 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹800 குறைந்து ₹1,04,800 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹109 குறைந்து ₹14,291 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹872 குறைந்து ₹1,14,328 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையில் மாற்றமில்லை

18 காரட் தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹110 குறைந்து ₹10,940 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 18 கேரட் தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹880 குறைந்து ₹87,520 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதற்கிடையே புதன்கிழமை வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹245 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், வெள்ளி விலை ஒரு கிலோ ₹2,45,000 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Advertisement