Loading...
வாரத்தின் இரண்டாவது நாளும் குறைந்தது தங்கத்தின் விலை; இதுதான் சவரன் விலை
வாரத்தின் இரண்டாவது நாளும் குறைந்தது தங்கத்தின் விலை

வாரத்தின் இரண்டாவது நாளும் குறைந்தது தங்கத்தின் விலை; இதுதான் சவரன் விலை

எழுதியவர் Venkatalakshmi V
Oct 13, 2026
12:30 pm

செய்தி முன்னோட்டம்

நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. அதன்படி, செவ்வாய்கிழமை (அக்டோபர் 13), சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹35 குறைந்து ₹13,685 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹280 குறைந்து ₹1,09,480 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹39 குறைந்து ₹14,929 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹312 குறைந்து ₹1,19,432 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையில் மாற்றமில்லை

18 காரட் தங்கத்தின் விலையும் இன்று குறைந்துள்ளது.

அதன் படி 18 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹30 குறைந்து ₹11,240 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹240 குறைந்து ₹89,920 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

இதற்கிடையே செவ்வாய்கிழமை வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.

வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹245.00 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ வெள்ளி ₹2,45,000 ஆக விற்கப்படுகிறது.

ADVERTISEMENT