ரூ.15 லட்சத்திற்கும் குறைவான விலையில், 2022 இல் அறிமுகப்படுத்தப்பட்ட டாப் 5 கார்கள்
டாடா மோட்டோர்ஸ், டொயோடா, மஹிந்திரா மற்றும் ஃபோக்ஸ்வேகன் போன்ற பிராண்டுகள், இந்தாண்டு பல அறிமுகங்களை செய்துள்ளன. அவற்றில், பட்ஜெட் விலையில், ரூ. 15 லட்சத்திற்கும் குறைவான விலையில் அறிமுகப்படுத்தபட்ட கார்களில், டாப் 5 இதோ: டொயோடா க்லன்சா: காரின் ஆரம்ப விலை ரூ. 6.59 லட்சம் ஆகும். இந்த வண்டியில், ஹெட்-அப் டிஸ்ப்ளே, ஆடியோ சிஸ்டம், 9.0 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் பேனல் மற்றும் ஆறு ஏர்பேக்குகள் உள்ளன. டொயோட்டா அர்பன் குரூஸர் ஹைரைடர்: காரின் ஆரம்ப விலை ரூ. 10.48 லட்சம் ஆகும். காற்றோட்டமான முன் இருக்கைகள், ஒரு பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜர், ஆறு ஏர்பேக்குகள் மற்றும் 9.0 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை உள்ளே கிடைக்கின்றன.
டாப் 5 பட்ஜெட் கார்கள்
ஃபோக்ஸ்வேகன் விர்டஸ்: காரின் ஆரம்ப விலை ரூ. 11.32 லட்சம் ஆகும். இது செடான் வகை கார் ஆகும். ஐந்து இருக்கைகள், ஒரு சன்ரூஃப், ஒரு மல்டிஃபங்க்ஸ்னல் ஸ்டீயரிங் ஆகியவை உள்ளன. மஹிந்திரா ஸ்கார்பியோ-N: ஆரம்ப விலை ரூ. 11.99 லட்சம் ஆகும். இது ஒரு எஸ்யூவி வகை. இது சன்ரூஃப், 8.0-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் பேனலுடன் கூடிய விசாலமான ஆறு/ஏழு இருக்கைகள் கொண்ட கேபின் கொண்டுள்ளது. டாடா டிகோர் EV: ஆரம்ப விலை ரூ. 12.49 லட்சம் ஆகும். நீல நிற வண்ணத்தில், தானியங்கி ஹெட்லேம்ப்கள், கூரையில் பொருத்தப்பட்ட ஆண்டெனா, ஐந்து இருக்கைகள், க்ரூஸ் கண்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் பின்புறக் காட்சி கேமரா ஆகியவை உள்ளன.