LOADING...
ஒருமுறை சார்ஜ் செய்தால் 154 கிமீ மைலேஜ்! ராயல் என்ஃபீல்டின் முதல் எலக்ட்ரிக் பைக் டெலிவரி தொடங்கியது
ராயல் என்ஃபீல்டின் முதல் எலக்ட்ரிக் பைக் டெலிவரி தொடங்கியது

ஒருமுறை சார்ஜ் செய்தால் 154 கிமீ மைலேஜ்! ராயல் என்ஃபீல்டின் முதல் எலக்ட்ரிக் பைக் டெலிவரி தொடங்கியது

எழுதியவர் Sekar Chinnappan
Jun 20, 2026
03:46 pm

செய்தி முன்னோட்டம்

முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ராயல் என்ஃபீல்டு, எலக்ட்ரிக் வாகன சந்தையில் தனது புதிய பயணத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் பைக்கான பிளையிங் ஃப்ளீ C6 (Flying Flea C6) மாடலின் வாடிக்கையாளர் விநியோகம் பெங்களூரில் தற்போது துவங்கியுள்ளது. சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் எதிர்கால மின்சார வாகன உத்தியின் ஒரு முக்கியப் பகுதியாக இந்த புதிய பிளையிங் ஃப்ளீ என்ற புதிய சப்-பிராண்ட் உருவாக்கப்பட்டுள்ளது.

பெங்களூர்

பெங்களூரில் பிரத்யேக சர்வீஸ் நெட்வொர்க் அமைப்பு

வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்கும் நோக்கில், பெங்களூர் முழுவதும் பிரத்யேகப் பராமரிப்பு மையங்களை இந்நிறுவனம் அமைத்துள்ளது. இதற்காகப் பிடிஎம் லேஅவுட் பகுதியில் மத்திய சேவை மையத்தையும், நகரின் பிற பகுதிகளில் வழக்கமான பராமரிப்புக்கான துணை மையங்களையும் ஹப்-ஆண்ட்-ஸ்போக் முறையில் நிறுவியுள்ளது. மேலும், ராயல் என்பீல்டின் தற்போதைய ஷோரூம்களுக்குள்ளேயே ஷாப்-இன்-ஷாப் முறையிலும் இந்த எலக்ட்ரிக் பைக்குகள் விற்பனை செய்யப்பட உள்ளன. இத்துடன் 24 மணிநேர அவசர கால உதவி வசதியும் வழங்கப்படுகிறது.

பேட்டரி சந்தா

எக்ஸ்-ஷோரூம் விலை மற்றும் பேட்டரி சந்தா விபரம்

பிளையிங் ஃப்ளீ C6 எலக்ட்ரிக் பைக் தற்போது ஸ்டார்ம் பிளாக் மற்றும் ஃப்ளீ கிரீன் ஆகிய இரண்டு வண்ணங்களில் விற்பனைக்குக் கிடைக்கிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை 2.79 லட்சம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேவேளையில், வாடிக்கையாளர்களின் ஆரம்பக்கட்ட விலையைக் குறைக்கும் வகையில் பேட்டரி-அஸ்-ஏ-சர்வீஸ் (BaaS) என்ற பேட்டரி சந்தா திட்டத்தையும் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பேட்டரி இல்லாமல் பைக்கின் ஆரம்ப விலையை வெறும் 1.99 லட்சம் ரூபாய்க்குப் பெற்றுக்கொள்ள முடியும்.

Advertisement

வடிவமைப்பு

பாரம்பரிய வடிவமைப்பும் நவீன தொழில்நுட்பமும்

கடந்த 1940 ஆம் ஆண்டு ராணுவப் பயன்பாட்டில் இருந்த புகழ்பெற்ற பிளையிங் ஃப்ளீ பைக்கின் ரெட்ரோ வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய FF.C6 மாடல் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 3.91kWh லித்தியம்-அயன் பேட்டரி பேக் மற்றும் 21bhp ஆற்றலை வெளிப்படுத்தும் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. வெறும் 124 கிலோ எடை கொண்ட இந்த பைக், மணிக்கு 115 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. சாதாரண 16A சாக்கெட் மூலம் இதன் பேட்டரியை 20 முதல் 80 சதவீதம் வரை வெறும் ஒரு மணிநேரத்தில் விரைவாக சார்ஜ் செய்ய முடியும்.

Advertisement

சிறப்பம்சங்கள்

மேம்பட்ட ஏஐ வசதிகள் மற்றும் சிறப்பம்சங்கள்

இந்த நவீன எலக்ட்ரிக் பைக்கில் புளூடூத், வைஃபை, 4ஜி கனெக்டிவிட்டி மற்றும் ஓடிஏ மென்பொருள் அப்டேட் போன்ற பல வசதிகள் உள்ளன. மேலும், லீன்-சென்சிட்டிவ் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டிராக்ஷன் கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் வாய்ஸ் அசிஸ்டன்ஸ் போன்ற பாதுகாப்பு அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. இந்த பைக்கின் முன்பக்கத்தில் ரெட்ரோ ஸ்டைல் கொண்ட கோர்டு அலுமினியம் கிர்டர் ஃபோர்க் சஸ்பென்ஷன் அமைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் பிரிட்டன் பொறியாளர்கள் இணைந்து உருவாக்கிய இத்தயாரிப்பிற்கு ஏற்கனவே சர்வதேச ரெட் டாட் விருது 2025 வழங்கப்பட்டுள்ளது.

Advertisement