LOADING...
ஓலா எஸ்1 ப்ரோ முன் சக்கரம் உடைந்து விபத்து! ஐசியூவில் இளம்பெண்;
ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விபத்து சம்பவம்

ஓலா எஸ்1 ப்ரோ முன் சக்கரம் உடைந்து விபத்து! ஐசியூவில் இளம்பெண்;

எழுதியவர் Siranjeevi
Jan 24, 2023
06:08 pm

செய்தி முன்னோட்டம்

எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான ஓலா எஸ்1 ப்ரோவை ஓட்டிசென்ற இளம்பெண் ஒருவர் முன் சக்கரம் துண்டிக்கப்பட்டு விழுந்து விபத்தில் சிக்கியுள்ளார். ஐனவரி 21 ஆம் தேதி அன்று, பெண் ஒருவர் ஓலா எஸ் 1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பயணம் செய்கையில், திடீரென முன் பக்க சஸ்பென்ஷன் கழன்று விழுந்துள்ளது. இதனால் நிலை தடுமாறி அந்த பெண் விழுந்து படுகாயமடைந்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அப்பெண் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து அப்பெண்ணின் கணவர் தெரிவிக்கையில், இந்த விபத்துக்கு ஓலா நிறுவனம் எந்த பதிலும் அளிக்கவில்லை, மாற்று மாடலை அனுப்ப கூறியும் ஓலா நிறுவனம் பதிலளிக்கவில்லை., அதற்கான உரிய பணத்தையும் வழங்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்