பேட்டரி பிரச்சனையா? குளிர்காலத்திலும் உங்கள் EV ரேஞ்சை அள்ள இதோ சில வழிகள்!
செய்தி முன்னோட்டம்
குளிர்காலத்தில் பேட்டரியின் செயல்திறன் 15-20% வரை குறையக்கூடும். இதனைத் தவிர்க்க, எலக்ட்ரிக் வாகனத்தை சார்ஜ் செய்யும்போதே 'ப்ரீ-ஹீட்டிங்' (Pre-heating) வசதியைப் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் வாகனத்தின் உட்புறத்தைச் சூடாக்கத் தேவைப்படும் ஆற்றல் நேரடியாக மின்சார இணைப்பிலிருந்தே எடுக்கப்படும், இதனால் பேட்டரியின் ஆற்றல் மிச்சமாகும். மேலும், பேட்டரியின் அளவை எப்போதும் 20% முதல் 80% வரை இருக்குமாறு பராமரிப்பது பேட்டரியின் நீண்ட கால ஆயுளுக்கு நல்லது.
டிரைவிங்
டிரைவிங் மோடு மற்றும் வேகம்
அதிக வேகத்தில் வாகனத்தை ஓட்டும்போது பேட்டரி மிக விரைவாகச் செலவாகும். எனவே, குளிர்காலத்தில் மிதமான வேகத்தில் செல்வது பாதுகாப்பானது மட்டுமல்லாமல் ரேஞ்சையும் அதிகரிக்க உதவும். மின்சார வாகனங்களில் உள்ள 'எக்கோ மோடை' (Eco mode) பயன்படுத்துவதன் மூலம் மின் நுகர்வைக் குறைத்து அதிகத் தூரம் பயணிக்க முடியும். பனிமூட்டம் அல்லது மோசமான வானிலையில் மெதுவாகச் செல்வது விபத்துகளைத் தவிர்க்கவும் உதவும்.
டயர் பராமரிப்பு
டயர் பராமரிப்பு மற்றும் காற்று அழுத்தம்
குளிர்ச்சியான வானிலையில் டயர்களில் உள்ளக் காற்று அழுத்தம் குறைய வாய்ப்புள்ளது. டயர்களில் காற்று குறைவாக இருந்தால், அது வாகனத்தின் மைலேஜைப் பெருமளவு பாதிக்கும். எனவே, டயர்களில் சரியான அளவில் காற்று அழுத்தம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். சாதாரணக் காற்றுக்குப் பதிலாக நைட்ரஜன் வாயுவைப் பயன்படுத்துவது காற்று அழுத்தம் சீராக இருக்க உதவும்.