காஸ்மெடிக் அப்டேட்களுடன் புதிய கான்செப்ட் ஸ்விப்ட் மாடலை அறிமுகப்படுத்தவிருக்கும் மாருதி சுஸூகி
2024 ஜனவரி 2ம் வாரத்தில் 'டோக்கியோ ஆட்டோ சலான்' ஆட்டோமொபைல் நிகழ்வு ஒன்று நடைபெறவிருக்கிறது. இந்த நிகழ்வில் புதிய 2024 ஸ்விப்ட் மாடலின் கான்செப்ட் வெர்ஷன் அறிமுகப்படுத்தவிருக்கிறது மாருதி சுஸூகி. 2024 ஸ்விப்ட் மாடலில் இருந்து இந்த கான்செப்ட் காரின் வசதிகளில் பெரிய மாற்றங்கள் இருக்காது. ஆனால், டிசைனில் மேம்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. ஆம், முற்றிலும் காஸ்மெட்டிக் மாற்றங்களை மட்டும் கொண்டிருக்கும் புதிய கான்செப்ட் மாடலை 2024 டோக்கியோ ஆட்டோ சலானில் அறிமுகப்படுத்தவிருக்கிறது மாருதி சுஸூகி. சாதாரண ஸ்விப்ட் மாடலில் இருந்து இந்த கான்செப்ட் மாடலை வேறுபடுத்திக் காட்ட, கூல் யெல்லோ மெட்டாலிக் ஃபினிஷ் நிறம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இத்துடன், ரூஃப் மற்றும் இதர பாகங்கள் கருப்பு நிறத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
2024 மாருதி சுஸூகி ஸ்விப்ட்:
வெளிப்பக்கம் மட்டுமின்றி, புதிய கான்செப்ட் ஸ்விப்டின் உட்பக்கமும் பல்வேறு டிசைன் மாற்றங்கள் மற்றும் மேம்பாடுகளைச் செய்திருக்கிறது மாருதி சுஸூகி. முந்தைய ஸ்விப்டின் மேம்பட்ட டிசனை புதிய 2024 கான்செப்ட் ஸ்விப்ட் கொண்டிருந்தாலும், இன்ஜின் வகையில் முற்றிலும் புதிய இன்ஜினே 2024 ஸ்விப்டில் கொடுக்கப்பட்டிருக்கிறது. கான்செப்ட் ஸ்விப்டில் 80hp பவர் மற்றும் 108Nm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய Z12E இன்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இது முந்தைய ஸ்விப்ட் இன்ஜின் வெளிப்படுத்திய, 88hp பவர் மற்றும் 113Nm டார்க்கை விட சற்று குறைவான பவரையே வெளிப்படுத்துகிறது. புதிய 2024 ஸ்விப்டில், ஹைபிரிட் மற்றும் ஆல்-வீல் டிரைவ் தேர்வுகளையும் மாருதி சுஸூகி வழங்குவது குறிப்பிடத்தக்கது.