LOADING...
மஹிந்திராவின் XUV 7XO எஸ்யூவி எவ்வளவு மைலேஜ் கொடுக்குது தெரியுமா?
மஹிந்திரா XUV 7XO

மஹிந்திராவின் XUV 7XO எஸ்யூவி எவ்வளவு மைலேஜ் கொடுக்குது தெரியுமா?

எழுதியவர் Prasanna
Mar 10, 2026
12:11 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த ஜனவரி மாதம் மேம்படுத்தப்பட்ட XUV 7XO எஸ்யூவி மாடலை இந்தியாவில் வெளியிட்டது மஹிந்திரா. அதற்கு முன்னர் விற்பனையில் இருந்த XUV 700 எஸ்யூவி மாடலை ஃபேஸ்லிப்ட் வெர்ஷனாகவே இது வெளியானது. வழக்கமான ஃபேஸ்லிப்ட் என்றால் வசதிகள் மற்றும் டிசைனை மட்டுமே மாற்றுவார்கள். இந்தக் காரில் பெயரையும் அந்நிறுவனம் மாற்றிவிட்டது. இந்தக் காரில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் என இரண்டு இன்ஜின் தேர்வுகளைக் கொடுத்துள்ளது அந்நிறுவனம். இதில் பெட்ரோல் இன்ஜினானது எவ்வளவு மைலேஜ் கொடுக்கிறது என்பதைப் பார்க்கலாம்.

மஹிந்திரா

XUV 7XO மைலேஜ்

மஹிந்திராவின் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினானது 203 hp பவர் மற்றும் 380 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளைக் கொடுத்துள்ளது அந்நிறுவனம். ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட மாடலானது நெரிசல் மிகுந்த நகரச் சாலைகளில் லிட்டருக்கு 7.60 கிமீ வரையிலான மைலேஜையும், நெடுஞ்சாலைகளில் லிட்டருக்கு 9.80 கிமீ வரையிலான மைலேஜையும் கொடுக்கிறது. மேனுவல் கியர்பாக்ஸில் இந்த மைலேஜ் அளவு இன்னும் கொஞ்சம் குறைவாக இருக்கும். இது நிறுவனங்கள் குறிப்பிடும் மைலேஜ் அளவு அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு வாடிக்கையாளர்களும் தினசரி பெறும் மைலேஜ் அளவு தான் இது.

Advertisement