Page Loader
இந்தியாவில் நேரம் தவறாத விமான சேவை வழங்கும் நிறுவனமாக இண்டிகோ தேர்வு
நேரம் தவறாத விமான சேவை வழங்கும் நிறுவனமாக இண்டிகோ தேர்வு

இந்தியாவில் நேரம் தவறாத விமான சேவை வழங்கும் நிறுவனமாக இண்டிகோ தேர்வு

எழுதியவர் Venkatalakshmi V
Dec 21, 2022
07:17 pm

செய்தி முன்னோட்டம்

நான்கு மெட்ரோ விமான நிலையங்களிலிருந்து (பெங்களூரு, டெல்லி, ஹைதராபாத் மற்றும் மும்பை) பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் DGCA வெளியிட்டுள்ள அறிக்கையில், இண்டிகோ நிறுவனம், இந்தியாவிலேயே நேரம் தவறா விமான சேவை தருவதாக, சாதனையைப் பெற்றுள்ளது. விமானத்துறையில், 50 சதவீதத்திற்கும் அதிகமான பங்கை உடைய விமான நிறுவனமானமாகவும், இண்டிகோ விளங்குகிறது. நவம்பர் 2022கான நேர செயல்திறன் (OTP) புள்ளிவிவரங்களை DGCA சமீபத்தில் வெளியிட்டது. அதில், இண்டிகோ நிறுவனம், 92.5 % OTPயுடன், நாட்டிலேயே நேரம் தவறா சேவை அளிக்கும் விமான நிறுவனமாக முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. கடும் போட்டி நிலவிய இந்த புள்ளிவிவரத்தின் படி, பல மாதங்களுக்கு பிறகு, இண்டிகோ மீண்டும் முதலிடத்தில் தேர்வாகி உள்ளது.

இண்டிகோ

நேரம் தவறாத விமான சேவை

பட்ஜெட் கேரியர் ஏர்லைன்ஸ் எனக்கருதப்படும் இந்நிறுவனம், இந்த ஆண்டின் தொடக்கத்தில் சற்று சுணங்கி இருந்தது. பல்வேறு காரணங்களால், இதன் OTP சரிவை சந்தித்தது. அதையெல்லாம் களைந்து, இப்போது மீண்டும் முதல் இடத்தில், நாட்டின் மிக சரியான நேரத்தில் செயல்படும் விமான சேவை நிறுவனமாக முடிசூட்டப்பட்டுள்ளது. மார்ச் 2022 இல், இண்டிகோ பெற்றிருந்த OTP 93.9% ஆகும். எனினும், அக்டோபர் 2022ல், 90.8% OTP ஐ பெற்று, முதல் விமான நிறுவனமாக இருந்த ஏர் இந்தியா, இப்போது, நவம்பர் மாதத்தில் 88.2% உடன் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. விஸ்தாரா 85.6% OTPயுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. ஏர் ஏசியா இந்தியா 75% OTPஐ பதிவு செய்துள்ளது.