கனவா நிஜமா: 2023 இல் வருகிறது eVTOL இன் புதிய பறக்கும் எலக்ட்ரிக் கார்
அமெரிக்க விமானப்படையின் (USAF) ஒரு பகுதியாக, ஹெக்ஸா எலக்ட்ரிக் (eVTOL) விமானம் எனப்படும் மின்சார 'பறக்கும் காரை' பறக்க பயிற்சி செய்து வருகிறது. இந்த பறக்கும் காரினால், செங்குத்தாக பறக்கவும், தரையிறங்கவும் முடியும். இதன் பரிசோதனை ஓட்டம் சில மாதங்களுக்கு முன் நடைபெற்றது. முதற்கட்டமாக ராணுவம் தளவாடங்கள் மற்றும் போர்க்கால வெளியேற்றம் ஆகியவற்றிற்கு பயன்படும் என செய்திகள் தெரிவிக்கின்றன. மேஜர். ரிலே லிவர்மோர் "இந்தப் பயிற்சியை வெற்றிகரமாக முடிப்பது மிகப்பெரிய மைல்கல் மற்றும் நம்பிக்கையை அதிகரிக்கும்" என்று கூறினார். ஹெக்சா விமானத்தை இயக்க, இரண்டு பேர் கொண்ட குழு தேவை. ஒருவர் விமானத்தின் இயக்கத்தை உள்ளிருந்து கட்டுப்படுத்தவும், மற்றவர் விமான அமைப்புகள், பேட்டரிகள், வெளிப்புற மாறிகள் போன்றவற்றைக் கண்காணிக்கவும் தேவை.
சரக்குகள் மட்டுமல்லாமல் பயணிகளை ஏற்றிச் செல்லும் eVTOLன் பறக்கும் எலக்ட்ரிக் கார்
USAF, தனது முதல் eVTOL ஐ, 2023 ஆம் ஆண்டுக்குள் பயணிகளை ஏற்றிச் செல்வதற்கும், சரக்குகளை அனுப்புவதற்கும் பயன்படுத்த போவதாக ஊடக செய்திகள் கூறுகின்றன. இதற்காக, 2023 நிதியாண்டில், ஆய்வுப் பயன்பாட்டிற்காக பத்து eVTOL விமானங்களை குத்தகைக்கு எடுக்க $3.6 மில்லியனை, அமெரிக்கா அரசு ஒதுக்கியுள்ளது. மேலும், 66 விதமான பயன்பாடுகளை, இந்த பறக்கும் கார் கொண்டுள்ளதாக கூறுகின்றனர். ராணுவ படைகளின் ஊடுருவலுக்கும், வெளியேற்றத்திருக்கும், மக்களை மீட்கவும் என பல கள நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் எனத்தெரிகிறது. எனினும், இது மக்கள் பயன்பாட்டிற்கு வருமா என பொறுத்திருந்து பார்க்கவேண்டும். ஹெக்ஸா விமானம், USAF வாங்கக்கூடிய முதல் eVTOL விமானங்களில் ஒன்றாகும். டெக்சாஸ் மாகாணத்தை தலைமை இடமாக கொண்ட, லிஃப்ட் ஏர்கிராஃப்ட் என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.