டுகாட்டி DesertX V2 பைக் புக்கிங் இந்தியாவில் தொடங்கியது; விலை & சிறப்பம்சங்கள்
செய்தி முன்னோட்டம்
இத்தாலிய சூப்பர் பைக் தயாரிப்பாளரான டுகாட்டி, தனது புதிய தலைமுறை DesertX V2 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. சர்வதேச EICMA 2026 வாகனக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட இந்த புதிய பைக், இன்னும் சில வாரங்களில் இந்திய விற்பனையகங்களை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இந்த பைக்கின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.19 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
செயல்திறன் அம்சங்கள்
புதிய 890cc எஞ்சின் மற்றும் மேம்படுத்தப்பட்ட செயல்திறன் அம்சங்கள்
முந்தைய 937cc டெஸ்டாஸ்ட்ரெட்டா எஞ்சினுக்கு பதிலாக, இந்த புதிய மாடலில் 890cc, 90-டிகிரி V2 எஞ்சின் மற்றும் புதிய மோனோகாக் சேசிஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.
புதிய எஞ்சின் 9,000 ஆர்பிஎம்மில் 110.3 பிஎச்பி பவரையும், 7,000 ஆர்பிஎம்மில் 92 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது.
அத்துடன் 6-ஸ்பீட் கியர்பாக்ஸ் மற்றும் குறைந்த பராமரிப்பு செலவுகளுடன் நீண்ட சவாரி இடைவெளிகளை வழங்கும் வகையில் பைக் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆஃப்-ரோடு சவாரி
ஆஃப்-ரோடு சவாரிக்கான பிரத்யேக DesertX Rally வேரியண்ட்
சாதாரண V2 மாடலுடன் சேர்த்து, தீவிர ஆஃப்-ரோடு சவார விரும்பிகளுக்காக DesertX Rally என்ற உயர்தர வேரியண்ட்டையும் டுகாட்டி அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய மாடலில் தொழில்முறை சவால்களுக்கு ஏற்ற KYB சஸ்பென்ஷன், கஷிமா கோட்டிங் மற்றும் 249 மிமீ வரையிலான முன்சக்கர சஸ்பென்ஷன் டிராவல் வசதி வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் இலகுரக எக்ஸெல் டகசகோ டியூப்லெஸ் ஸ்போக் வீல்கள் வழங்கப்பட்டிருந்தாலும், பைக்கின் எடையில் எந்த மாற்றமும் இன்றி 209 கிலோவாகவே பராமரிக்கப்பட்டுள்ளது.
ரைடர் பாதுகாப்பு வசதிகள்
நவீன எலக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்பங்கள் மற்றும் ரைடர் பாதுகாப்பு வசதிகள்
புதிய டுகாட்டி DesertX V2 பைக்கில் 5-இன்ச் TFT டிஸ்ப்ளே, க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் பலதரப்பட்ட ரைடிங் மோடுகள் வழங்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பிற்காக கார்னரிங் ஏபிஎஸ், டிராக்ஷன் கன்ட்ரோல், வீலி கன்ட்ரோல் மற்றும் என்ஜின் பிரேக் கன்ட்ரோல் ஆகிய அதிநவீன அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
கரடுமுரடான பாதைகள் மற்றும் நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ள விரும்புவோருக்கு இந்த புதிய டுகாட்டி பைக் சிறந்த தேர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.