அப்டேட் செய்யப்பட்ட பல்சர் NS200, எப்படி இருக்கிறது?: ரிவ்யூ
2023-ம் ஆண்டுக்கான அப்டேட் செய்யப்பட்ட பல்சர் NS200 பைக்கை கடந்த மாதம் இந்தியாவில் வெளியிட்டது பஜாஜ். இந்த அப்டேட் இந்திய ஆட்டோமொபைல் சந்தைக்கானது என் கடந்த லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கானது என்று தான் கூற வேண்டும். என்னென்ன புதிய வசதிகள்: முன்பக்கம் முன்பு இருந்த சஸ்பென்ஷனை மாற்ற USD ஃபோர்கைக் கொடுத்திருக்கிறது பஜாஜ். பல்சர் 250 சீரிஸில் பயன்படுத்ததப்பட்ட லேசான வீல்களை இதற்கும் கொடுத்திருக்கிறது. மேலும், டூயல் சேனல் ஏபிஎஸ் வசதியை ஸ்டாண்டர்டாகவே கொண்டு வந்திருக்கிறது. கையாளுதல்: முன்னாள் கொடுக்கப்பட்ட USD ஃபோர்க் கையாளுதலில் முன்னேற்றத்தைக் கொடுத்திருக்கிறது. மேடு பள்ளங்களிலும் சரி, கூரான வளைவுகளிலும் சரி, முன்பை விட தற்போது சிறப்பாக கையாளுகிறது இந்த NS200.
இன்ஜின் மற்றும் பெர்ஃபாமன்ஸ்:
பழைய NS200-ல் இருந்த அதே இன்ஜின் தான். ஆனால், இந்தியாவில் அடுத்த அமலாகவிருக்கும் BS6 ஃபேஸ் II விதிகளுக்கு ஏற்ப OBD2-வை மட்டும் கூடுதலாகக் கொடுத்திருக்கிறது பஜாஜ். பழைய இன்ஜினே சிறப்பான பெர்ஃபாமன்ஸையே கொடுத்தது என்பதால், அதில் குறையேதுமில்லை. 10,000 RPM வரை கூட ரெவ் செய்ய முடிகிறது. ஆனால், அதீதமாக ஆக்ஸிலரேட்டரை முறுக்கும் போது கொஞ்சம் அதிர்வை உணரமுடிகிறது. இறுதியாக.. முந்தைய NS200-ஐ விட அனைத்து அம்சங்களிலும் ஒரு படி மேலேயே பெர்ஃபார்ம் செய்கிறது இந்த புதிய NS200. ஆனால், இத்துடன் விளக்குகளையும் LED-ஆக கொடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். இந்தியாவில் ரூ.1.47 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியாகியிருக்கிறது இந்த புதிய பஜாஜ் NS200.