
இந்த மார்ச் மாதத்தில் ரெனால்ட் கார்களுக்கு செம்ம தள்ளுபடி அறிவிப்பு!
செய்தி முன்னோட்டம்
இந்த மார்ச் மாதத்தில் பல நிறுவனங்கள் தங்கள் கார்களை அறிமுகம் செய்யும் நிலையில், பிரெஞ்சு வாகன தயாரிப்பு நிறுவனமான ரெனால்ட் நிறுவனமும் கார்களுக்கான சலுகையை அறிவித்துள்ளது.
இந்தியாவில் அதன் KWID, Triber மற்றும் Kiger மாடல்களில் மார்ச் மாதத்தில் விற்பனையை அதிகரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
இவை தள்ளுபடி, எக்சேன்ஜ் மற்றும் கார்ப்பரேட் பலன்கள் வடிவில் வழங்கப்படுகின்றன. மேலும் இவை ஒவ்வொரு மாடல், வேரியண்ட் மற்றும் பகுதிக்கு ஏற்ப வேறுபடும்.
தொடர்ந்து, Renault KWID ஆனது ரூ. 57,000 மதிப்புள்ள சலுகைகளுடன் வழங்கப்படுகிறது. இதில் ரூ.25,000 வரை ரொக்க தள்ளுபடிகள் அடங்கும்.
LED DRL-கள் மற்றும் எஃகு சக்கரங்களுடன் போலி-SUV தோற்றத்தை வெளிப்படுத்துகிறது. ஐந்து இருக்கைகள் கொண்டுள்ளது.
ரெனால்ட் கார்கள்
ரெனால்ட் கார்களுக்கு தள்ளுபடியை அறிவிப்பு - என்னென்ன?
Renault Kiger
Renault Kiger அதிகபட்ச தள்ளுபடி விலையில் ரூ. 62,000, கார்ப்பரேட் போனஸுடன் ரூ. 25,000 வரை அறிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்யூவியில் ட்ரை-பீம் எல்இடி ஹெட்லைட்கள், ரூஃப் ரெயில்கள் மற்றும் 16 இன்ச் டிசைனர் அலாய் வீல்கள் உள்ளன.
ஐந்து இருக்கைகள் கொண்ட கேபினில் காற்று சுத்திகரிப்பு, 8.0-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், நான்கு ஏர்பேக்குகள் உள்ளன.
விலை விபரம்
இந்தியாவில், Renault KWID ரூ. 4.7 லட்சம் மற்றும் ரூ. 6.33 லட்சம், விலையிலும், ட்ரைபர் ரூ. 6.33 லட்சம் மற்றும் ரூ. 8.97 லட்சம், கிகர் ரூ. 6.5 லட்சம் மற்றும் ரூ. 11.23 லட்சம் ஆகிய விலைகளில் கிடைக்கும்.