
ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்றெடுத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த பெண்மணி
செய்தி முன்னோட்டம்
ஒரே பிரசவத்தில் இரட்டை குழந்தை பிறப்பதே ஒரு அதிசயமாக இருக்கும் போது, 9 குழந்தைகள் பிறந்திருக்கின்றன என்பதை நம்புவதற்கு கொஞ்சம் கடினமாகத் தான் இருக்கிறது.
ஆப்பிரிக்க நாடான மாலியை சேர்ந்த ஹலிமா சிஸ்லி என்ற பெண்மணி பிரசவத்திற்கு முன் சிகிச்சைக்காக மொரோக்காவிற்கு அனுப்பப்பட்டார்.
26 வயதான ஹலிமா சிஸ்லி'யும் அவரது கணவரான அப்தெல் காதர் அர்பி அவர்களும் மொரோக்கோவிற்கு சென்று மருத்துவமனையில் சேர்ந்த நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் 4ம் தேதி இவர்களுக்கு 4 ஆண் குழந்தைகளும், 5 பெண் குழந்தைகளும் அறுவை சிகிச்சை மூலம் பிறந்தது.
இதனை தொடர்ந்து அவர்கள் மொரோக்கோவில் உள்ள காசாபிளாங்கா நகரில் மருத்துவ சிகிச்சைகளுக்காக வசித்து வந்தன்ர்.
கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தனர்
ஒரே பிரசவத்தில் அதிக எண்ணிக்கையில் பிறந்தாலும் ஆரோக்கியமாக உள்ள குழந்தைகள்
இந்நிலையில் தற்போது அவரது குழந்தைகளுக்கு ஒன்றரை வயது ஆகியுள்ள நிலையில் அனைவரும் ஆரோக்கியமாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, ஒரே பிரசவத்தில் அதிக எண்ணிக்கையில் பிறந்து, ஆரோக்கியமாக உள்ளதாக இக்குழந்தைகள் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர்.
உலக சாதனை பட்டியலில் இடம்பிடித்த ஹலிமாவுக்கும் அவரது குழந்தைகளுக்கும் சிகிச்சைகள் முடிவுற்ற நிலையில், அவர்கள் தற்போது தங்கள் சொந்த நாடான மாலிக்'கிற்கு சென்றுள்ளனர்.
ஏற்கனவே இது போல் 2 முறை ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள் பிறந்திருந்தாலும் அதில் அனைத்து குழந்தைகளும் உயிருடன் நீடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.