Page Loader
மனைவியின் தின்பண்டங்களை திருடி தின்ற கணவர்-புதிய குளிர்சாதன பெட்டிக்கு பூட்டு போட்ட கர்ப்பிணி மனைவி
புது பிரிட்ஜில் தின்பண்டங்களை வாங்கி பூட்டிய கர்ப்பிணி

மனைவியின் தின்பண்டங்களை திருடி தின்ற கணவர்-புதிய குளிர்சாதன பெட்டிக்கு பூட்டு போட்ட கர்ப்பிணி மனைவி

எழுதியவர் Nivetha P
Dec 25, 2022
10:16 pm

செய்தி முன்னோட்டம்

இணையத்தில் வேடிக்கையாக பகிரப்படும் பல சம்பவங்கள் வைரலாகும். அவ்வாறு கர்ப்பிணி ஒருவர் ஃபிரிட்ஜுக்கு பூட்டு போட்டதாக ரெட்டிட்டில் பகிர்ந்தது வைரலாக பகிரப்பட்டு வருகின்றது. அதில் அவர், "நான் 10 வார கால கர்ப்பிணியாக உள்ளேன், இது எங்களது முதல் குழந்தை. கர்ப்ப காலத்தில் எனக்கு அதிக சோர்வாகவும், அடிக்கடி பசிப்பதும் பிரச்சனையாக இருக்கிறது.. நாள் முழுவதும் சாப்பிட்டாலும் எனது பசி தீர்ந்தப்பாடில்லை. இதனால் கடந்த 5 வாரங்களாக எனக்கு பிடித்த உணவுகளான பீட்ஸா, ஊறுகாய், பழங்கள், நூடுல்ஸ், பாப்கார்ன், ஐஸ்-க்ரீம் போன்றவைகளை வாங்கி மொத்தமாக பிரிட்ஜில் வைத்து விடுவேன். எனினும் நான் அதனை எடுத்து சாப்பிட செல்லும் பொழுது உள்ளே ஒன்றும் இருக்காது, அவரின் கணவர் அனைத்தையும் சாப்பிட்டு காலி செய்து விடுவாராம்.

பிரிட்ஜை கண்டு கோபமுற்ற கணவர்

சொந்த சேமிப்பு பணத்தில் புது பிரிட்ஜ் வாங்கி கேரேஜில் வைத்த கர்ப்பிணி

எடுக்காதீர்கள் என்று கூறினால், வேண்டுமென்றால் வாங்கி கொள்ளலாம் என்பார். ஆனால் அவர் தனது பணத்தில் அப்பெண்ணுக்கு எந்த தின்பண்டமும் வாங்கி தந்ததில்லை என்று தெரிவித்துள்ளார். கலந்து பேசாமல், அந்தப்பெண் தனது சொந்த சேமிப்பு பணத்தில் பெரிய பிரிட்ஜ் ஒன்றினை ஆர்டர் செய்து வாங்கி கேரேஜில் வைத்து பூட்டி வைத்துள்ளார். இதனை கண்ட அவர கணவர், இது எப்பொழுது வாங்கினது, எவ்வளவு பணம்? ஏன் பூட்டப்பட்டுள்ளது? என்று கேள்விகளை முன்வைத்தார். அதற்கு அவர், தனது பணத்தில் தின்பண்டங்களை பாதுகாப்பதற்காக வாங்கி பூட்டி வைத்துள்ளேன் என்றிருக்கிறார். வீட்டில் உள்ள பிரிட்ஜில் உள்ள உணவுகளை அவர் தாராளமாக எடுத்து உண்ணலாம். ஆனால், கேரேஜில் உள்ள பிரிட்ஜில் உள்ளவை தனக்கு மட்டும் தான் என்று கூறியுள்ளார்.