
முன்னாள் காதலனின் இறுதி சடங்கிற்கு மேக்-அப் போட்டு கிளம்பி சென்ற 92 வயது மூதாட்டி
செய்தி முன்னோட்டம்
தற்போதைய காலக்கட்டத்தில் சமூக வலைத்தளங்களில் பல வித கேளிக்கை வீடியோக்கள் வலம் வந்து கொண்டுள்ளது. குறிப்பாக பல விதமான வீடியோக்கள் வைரலாகிறது.
எவ்வளவு வயதாக இருந்தால் என்ன, அதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை, தனக்கு பிடித்தது போல ஆடை அணிவது, அலங்கரித்துக் கொள்வது என்பதற்கு எதுவும் தடையாக இல்லை என்பதை ஒரு மூதாட்டி நிரூபித்திருக்கிறார்.
சமீபத்தில் இணையத்தளத்தில் 92 வயதுள்ள ஒரு மூதாட்டி தனது முன்னாள் காதலனின் இறுதி சடங்கிற்கு அழகான ஆடைகள் அணிந்து, அலங்காரங்கள் செய்து கொண்டு கிளம்பும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.
2 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது
இன்ஸ்டாக்ராமில் பதிவேற்றப்பட்ட 92 வயது மூதாட்டியின் வீடியோ
இன்ஸ்டாக்ராமில் இந்த வீடியோவினை ட்ரானியக் என்னும் வயதான பெண்மணி பதிவு செய்துள்ளார். அதில் அவர் தனது முன்னாள் காதலனான ப்ரூஸ்-ஸின் இறுதி சடங்கிற்கு செல்ல தயாராவதாக கூறியுள்ளார்.
மேலும் அந்த வீடியோவில் அவர் தன் முகத்திற்கு பவுடர் போட்டு கொள்வதையும், உதட்டு சாயம் பூசுவதையும் பதிவு செய்துள்ளார்.
அதனை தொடர்ந்து, தான் அதிகமாக மேக்-அப் போட்டு கொண்டு அங்குள்ள அனைவரது பார்வையையும் தன் மேல் விழ வைக்க விரும்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
தற்போது சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ 2 மில்லியன் பார்வையாளர்களுக்கு மேல் பார்க்கப்பட்டு மிக வேகமாக பகிரப்பட்டும் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.