Loading...
7 போட்டிகள், ஒரு தவறாவது நடந்தாலும் வாய்ப்பு போச்சு! WTC ஃபைனலுக்கு இந்தியா தகுதி பெறப்போவது எப்படி?
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி பெறுவதற்கு எஞ்சியுள்ள வாய்ப்புகள்

7 போட்டிகள், ஒரு தவறாவது நடந்தாலும் வாய்ப்பு போச்சு! WTC ஃபைனலுக்கு இந்தியா தகுதி பெறப்போவது எப்படி?

எழுதியவர் Sekar Chinnappan
Aug 28, 2026
03:16 pm

செய்தி முன்னோட்டம்

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியை டிராவில் முடித்ததைத் தொடர்ந்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) புள்ளிகள் பட்டியலில் இந்திய அணி 51.52% வெற்றி சதவீதத்துடன் (PCT) ஐந்தாவது இடத்தில் நீடிக்கிறது. இந்த சுழற்சியில் இந்திய கிரிக்கெட் அணிக்கு இன்னும் 7 டெஸ்ட் போட்டிகள் மட்டுமே மீதமுள்ளன. இதில் நியூசிலாந்துக்கு எதிராக அவாகளில் சொந்த மண்ணில் 2 போட்டிகளும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய மண்ணில் 5 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் தொடரும் அடங்கும். இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை உறுதிசெய்ய இந்திய அணி இப்போட்டிகளில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

வெற்றி சதவீதம்

தகுதி பெற இந்திய அணிக்கு தேவைப்படும் வெற்றிச் சதவீதம்

இந்திய அணி மீதமுள்ள 7 போட்டிகளிலும் வெற்றி பெற்றால், அவர்களின் வெற்றி சதவீதம் 70.37% ஆக உயர்ந்து, இறுதிப்போட்டிக்கான வாய்ப்பு உறுதியாகும்.

ஒருவேளை 6 போட்டிகளில் வெற்றியும் 1 போட்டியில் தோல்வியும் அடைந்தால், வெற்றிச் சதவீதம் 64.81% ஆக இருக்கும்.

இது ஓரளவு நல்ல வாய்ப்பை அளித்தாலும், மற்ற அணிகளின் முடிவுகளைச் சார்ந்திருக்க வேண்டியிருக்கும்.

கடந்த கால சுழற்சிகளைப் பார்க்கும்போது, 65% முதல் 70% வரை வெற்றி சதவீதம் வைத்துள்ள அணிகளே இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளன என்பதால் இந்திய அணி அதிகப் போட்டிகளை வெல்வது அவசியமாகும்.

ஆஸ்திரேலியா தொடர்

நியூசிலாந்து தொடரும் ஆஸ்திரேலியா மோதலும் ஏன் முக்கியம்?

ஒருவேளை நியூசிலாந்துக்கு எதிரான 2 போட்டிகளிலும் தோல்வியடைந்து, ஆஸ்திரேலியாவை 5-0 எனத் தாயகத்தில் வீழ்த்தினாலும் இந்திய அணியின் வெற்றி சதவீதம் 59.26% ஆக மட்டுமே இருக்கும்.

இந்த நிலை ஏற்பட்டால் இந்தியா மற்ற அணிகளின் தோல்விக்காகக் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகும்.

குறிப்பாக ஆஸ்திரேலியாவுடனான 5 போட்டிகள் கொண்ட தொடர் மிக முக்கியமானது.

ஏனெனில் ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது இந்திய கிரிக்கெட் அணியின் புள்ளிகளை உயர்த்துவதோடு மட்டுமல்லாமல், தகுதிப் பந்தயத்தில் முன்னணியில் இருக்கும் ஆஸ்திரேலியாவின் புள்ளிகளையும் கணிசமாகக் குறைக்கும்.

ADVERTISEMENT

வாய்ப்பு

பிற அணிகளின் சவாலும் இறுதிப்போட்டி வாய்ப்பும்

தற்போது புள்ளிகள் பட்டியலில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகியவை முதல் மூன்று இடங்களில் வலுவாக உள்ளன.

இந்த மூன்று அணிகளும் தங்களுக்குள் மோதும் தொடர்களும் இருப்பதால், இறுதிப்போட்டிக்கான தகுதிப் புள்ளி மாறுபட வாய்ப்புள்ளது.

எனவே, பிற அணிகளின் முடிவுகளை எதிர்பார்க்காமல் இந்திய அணி தனது அனைத்துப் போட்டிகளிலும் வெற்றிபெறுவதை மட்டுமே இலக்காகக் கொள்ள வேண்டும்.

வரும் போட்டிகளில் ஸ்லோ ஓவர்-ரேட் போன்ற காரணங்களால் புள்ளிகள் குறையாமல் பார்த்துக் கொள்வதும் இந்திய அணிக்கு மிக அவசியமாகும்.

ADVERTISEMENT