பட்டமே வாங்காத பஞ்சாப் கிங்ஸும், டெல்லி கேப்பிடல்ஸுமா! 2025இல் அதிகம் தேடப்பட்ட ஐபிஎல் அணிகள் இவைதான்
செய்தி முன்னோட்டம்
2025 ஆம் ஆண்டு முடிவடையும் நிலையில், கூகுள் நிறுவனம் உலகம் முழுவதும் அதிகம் தேடப்பட்ட (Trending) விளையாட்டு அணிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) அணிகளில் ஆச்சரியமளிக்கும் வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) அல்லது இந்த ஆண்டு கோப்பையை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) கூட முதலிடத்தில் இல்லை.
அணிகள்
தொடர் கோப்பைக்காகத் தேடப்பட்ட அணிகள்
விராட் கோலி, எம்எஸ் தோனி போன்ற ஜாம்பவான்கள் இருந்தபோதிலும், இந்த ஆண்டு கூகுள் தேடலில், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் உலகளவில் அதிக கவனத்தை ஈர்த்து, மற்ற அனைத்து ஐபிஎல் அணிகளையும் விஞ்சி முன்னணியில் உள்ளன. 2008 இல் தொடங்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் இதுவரை கோப்பையை வெல்லாத அணிகளாக இந்த இரண்டும் மட்டுமே எஞ்சியுள்ளன. இந்த இரு அணிகளும் கோப்பைக்காகக் கடுமையாகப் போட்டியிட்டதால், அவற்றின் மீது அதிக ஆர்வம் எழுந்திருக்கலாம். குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் முறையே ஆறாவது மற்றும் ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளன.
கால்பந்து
உலகளவில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் கால்பந்து அணி முதலிடம்
உலகளவில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு அணிகளின் பட்டியலில், பிரான்சின் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (PSG FC) கால்பந்து அணி முதலிடத்தைப் பிடித்துள்ளது. அந்த அணியின் வீரர் உஸ்மான் டெம்பேலே இந்த ஆண்டு பலோன் டி'ஓர் விருதை வென்றது இதற்கு முக்கியக் காரணமாக இருக்கலாம். இரண்டாமிடத்தில் எஸ்.எல்.பென்ஃபிகா (Benfica) அணியும், மூன்றாவது இடத்தில் டொராண்டோ புளூ ஜேஸ் (Toronto Blue Jays) பேஸ்பால் அணியும் உள்ளன.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Top Trending Global Searches: Sports Teams
— Google (@Google) December 4, 2025
1. Paris Saint-Germain FC
2. S.L. Benfica
3. Toronto Blue Jays
4. Punjab Kings
5. Delhi Capitals