NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / சந்திராயன்-2 மற்றும் சந்திராயன்-3 திட்டங்களுக்கு இடையேயான வேறுபாடுகள் என்ன?
    அடுத்த செய்திக் கட்டுரை
    சந்திராயன்-2 மற்றும் சந்திராயன்-3 திட்டங்களுக்கு இடையேயான வேறுபாடுகள் என்ன?
    வரும் வெள்ளியன்று நண்பகல் 2.35 மணிக்கு ஆந்திராவில் உள்ள ஸ்ரீஹரிக்கோட்டா ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்படுகிறது சந்திதாராயன்-3ஐ கொண்டு செல்லும் LVM3 ராக்கெட்

    சந்திராயன்-2 மற்றும் சந்திராயன்-3 திட்டங்களுக்கு இடையேயான வேறுபாடுகள் என்ன?

    எழுதியவர் Prasanna Venkatesh
    Jul 10, 2023
    03:26 pm

    செய்தி முன்னோட்டம்

    2019-ல் இஸ்ரோவின் சந்திராயன்-2 திட்டம் தோல்வியடைந்ததையடுத்து, அதன் தொடர்ச்சியான சந்திராயன்-3 திட்டம் வரும் வெள்ளியன்று செயல்படுத்தப்படவிருக்கிறது. சரி, சந்திராயன்-3 திட்டத்தில் முந்தைய திட்டத்திலிருந்து என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன? பார்க்கலாம்.

    சந்திராயன்-2 திட்டத்தில் ஆர்பிட்டர், ரோவர் மற்றும் லேண்டர் என மூன்று உபகரணங்கள் அனுப்பப்பட்டன. இதில் ஆர்பிட்டரானது சரியான இடத்தில் நிலைநிறுத்தப்பட்டு தற்போதும் செயல்பாட்டில் இருக்கிறது. அத்திட்டத்தில் அனுப்பப்பட்ட லேண்டர் மட்டுமே நிலவில் மோதி அத்திட்டம் தோல்வியடைந்தது.

    தற்போதைய திட்டத்தில் ஆர்பிட்டர் இன்றி லேண்டர் மற்றும் ரோவர் மட்டுமே அனுப்பப்படவிருக்கிறது. சந்திராயன்-3 விண்கலத்தில் இருக்கும் ப்ரொபல்ஷன் மாடியூலே நிலவில் தரையிறங்கவிருக்கும் லேண்டர் மற்றும் ரோவருக்கு செயற்கைக்கோள் இணைப்பாகவும் பயன்படுத்தப்படவிருக்கிறது.

    இத்துடன், சந்திராயன்-2 திட்டத்தில் அனுப்பப்பட்ட ஆர்பிட்டர் கூடுதல் செயற்கைக்கோள் இணைப்பாகப் பயன்படுத்தப்படவிருக்கிறது.

    இஸ்ரோ

    சந்திராயன் திட்டத்தின் பிரதான நோக்கம் என்ன? 

    சந்திராயன்-2 வின் பிரதானத் திட்டமே நிலவில் லேண்டரின் மென் தரையிறக்கத்தைச் சாத்தியப்படுத்துவது தான். விண்கலங்களை ஒரு குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட வேகத்தில் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து தரையிறக்குவதையே மென் தரையிறக்கம் எனக் குறிப்பிடுகிறார்கள்.

    சந்திராயன்-2 திட்டதை விட தற்போது மேம்பட்ட வன்பொருள் மற்றும் மென்பொருட்களை இந்தத் திட்டத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள். லேண்டர் சரியாக தரையிறங்குவதை உறுதி செய்ய முன்பு ஒரு கேமரா பொருத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது இரண்டு கேமராக்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

    முன்பை விட பெரிய சூரியஒளித் தகடுகள், உறுதியான லேண்டரின் கால்கள், நான்கு த்ரஸ்டர் இன்ஜின்கள் மற்றும் அதிக எரிபொருளைக் கொண்டு முந்தைய திட்டத்தில் பயன்படுத்தப்பட்டதை விட இந்தத் திட்டத்தில் மேம்படுத்தப்பட்ட உபகரணங்களைப் பயன்படுத்தியிருக்கிறது இஸ்ரோ.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இஸ்ரோ
    சந்திரன்
    விண்வெளி
    அறிவியல்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    இஸ்ரோ

    விண்ணில் செலுத்தப்படும் இஸ்ரோவின் புதிய SSLV D2 ராக்கெட் - முக்கிய விவரங்கள் இந்தியா
    இந்தியாவின் முதல் ஹைபிரிட் ராக்கெட் தமிழ்நாட்டில் இருந்து ஏவப்பட்டது இந்தியா
    இந்தியர்களே விண்வெளிக்கு பறக்க ஆசையா? 2030 ஆண்டிற்குள் விண்வெளி சுற்றுலா திட்டம் விண்வெளி
    இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி திட்டம் - விண்ணப்பிக்கும் முறை விண்வெளி

    சந்திரன்

    நிலவுக்கு செல்லும் புதிய ரோவர்.. அறிமுகப்படுத்திய வென்சூரி நிறுவனம்! விண்வெளி
    ஜூலை இரண்டாவது வாரத்தில் செயல்படுத்தப்படவுள்ள சந்திராயன்-3 திட்டம் இஸ்ரோ
    இன்று இரவு தோன்றவிருக்கும் 'சூப்பர் மூன்'-ல் என்ன ஸ்பெஷல்? பூமி
    இந்த ஜூலை மாதம் நிகழவிருக்கும் விண்வெளி நிகழ்வுகள்!காணத்தயாராகுங்கள்!  விண்வெளி

    விண்வெளி

    விண்ணில் ஏவப்படவிருக்கும் உலகின் சக்திவாய்ந்த ராக்கெட்!  எலான் மஸ்க்
    நாளை நிகழவிருக்கும் அரிய சூரிய கிரகணம்.. நாம் பார்க்க முடியுமா? இந்தியா
    நிலவில் நிரந்தரக் கட்டுமானம்.. சீனாவின் திட்டம் என்ன?  சீனா
    வெடித்து சிதறியது எலான் மஸ்க்கின் முதல் சோதனை ராக்கெட்!  எலான் மஸ்க்

    அறிவியல்

    பள்ளி பாடப்புத்தகங்களில் இருந்து பரிணாம வளர்ச்சி, தனிம அட்டவணை நீக்கப்பட்டது   இந்தியா
    புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இருக்கும் ஃபூக்கோவின் ஊசல் எதற்காக நிறுவப்பட்டது நாடாளுமன்றம்
    லித்தியம்-அயன் பேட்டரியின் மேம்பாட்டில் முக்கிய பங்காற்றிய ஜான் குட்டெனௌ காலாமானார் உலகம்
    பால்வெளி மண்டலத்தில் தோன்றிய நியூட்ரினோவைக் கண்டறிந்த விஞ்ஞானிகள் விண்வெளி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025