
வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கிய 'சந்திராயன் 3' - முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
செய்தி முன்னோட்டம்
நிலவின் தென் துருவத்தில் ஆராய்ச்சி மேற்கொள்ள உலகநாடுகள் முயற்சித்து வரும் நிலையில், இந்தியாவின் இஸ்ரோ நிறுவனம் 'சந்திராயன்' திட்டத்தினை தொடர்ந்து செயல்படுத்தி வந்தது.
அதன்படி, இன்று(ஆகஸ்ட்.,23) மாலை நிலவின் தென்துருவத்தில் 'சந்திரயான் 3' வெற்றிகரமாக குறிப்பிட்ட நேரத்தில் தரையிறங்கியுள்ளது.
இத்தருணம் இந்தியர்கள் அனைவருக்கும் மிக பெருமையான தருணமாகும்.
இந்நிலையில், இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், 'இது இந்தியாவின் விண்வெளி ஆய்வில் மிகப்பெரிய சாதனையாகும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உலகளவில் நிலவில் கால்பதிக்கும் 4வது நாடு என்னும் பெருமையினை இந்தியா பெற்றுள்ளது என்று கூறி இஸ்ரோ நிறுவனத்திற்கு தனது வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
'சந்திராயன் 3' வெற்றி
#BREAKING | "நிலவில் கால்பதிக்கும் 4வது நாடு என்ற பெருமையை பெற்றது இந்தியா" - இஸ்ரோவை வாழ்த்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்#SunNews | #Chandrayaan3Landing | @mkstalin | @isro pic.twitter.com/14z1dHG4Dn
— Sun News (@sunnewstamil) August 23, 2023