இந்திய கடல்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த 22 பாகிஸ்தான் மீனவர்கள் கைது
குஜராத் பகுதியின் ஒட்டிய பாகிஸ்தான் எல்லையை பாதுகாத்து வரும் பாதுகாப்பு படை பிரிவு சார்பில் ஓர் அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அத்துமீறி இந்திய கடல்பகுதிக்குள் நுழைந்த 22 பாகிஸ்தான் மீனவர்களை கைது செய்துள்ளோம் என்றும், 79 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம், புட்ச் கடல்பகுதியில் கடலோர காவல்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொழுது, 79 மீன்பிடி படகுகள் அத்துமீறி உள்ளே நுழைவதை கண்டறிந்து மேற்கண்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை சோதனை செய்ததில், 22 பாகிஸ்தானை சேர்ந்த மீனவர்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட படகுகளில் போதை பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது
அவர்கள் வந்த படகுகளில் ஹெராயின் போதைப்பொருள் மற்றும் சில புகையிலை பொருட்கள் இருந்ததை ஆய்வு செய்து கண்டறிந்துள்ளனர். இதனை தொடர்ந்து அவர்களை கைது செய்த காவலப்படையினர், இந்திய எல்லை பாதுகாப்புப்படை போலீசிடம் ஒப்படைத்தனர். மேலும் 2022ம் ஆண்டில், 250 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் பொருட்கள், ரூ.2.49 கோடி மதிப்புள்ள கஞ்சா முதலியன பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்திய - பாகிஸ்தான் எல்லை 7,419 கி.மீ. தொலைவு கொண்டதாகும். இதில் ராஜஸ்தானின் பார்மர் முதல் ராணா கட்ச் பகுதி வரை 826 கி.மீ. தொலைவு கொண்ட எல்லைப் பகுதியை குஜராத் எல்லை பாதுகாப்புப் படை பிரிவு பாதுகாத்து வருகிறது என்பது குறிப்பிடவேண்டியவை.