Loading...
தமிழக மண்ணில் இந்தியைத் திணிக்க முடியாது! உச்ச நீதிமன்ற அறிவுரைக்கு மத்தியிலும் இருமொழிக் கொள்கையில் உறுதியாக நிற்கும் தவெக அரசு
உச்ச நீதிமன்ற அறிவுரைக்கு மத்தியிலும் இருமொழிக் கொள்கையில் உறுதியாக நிற்கும் தவெக அரசு

தமிழக மண்ணில் இந்தியைத் திணிக்க முடியாது! உச்ச நீதிமன்ற அறிவுரைக்கு மத்தியிலும் இருமொழிக் கொள்கையில் உறுதியாக நிற்கும் தவெக அரசு

எழுதியவர் Sekar Chinnappan
Sep 19, 2026
12:31 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியைக் கற்பிப்பது தொடர்பாக தனது மனநிலையை மாற்றிக் கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்திய நிலையிலும், தமிழக அரசு தனது இருமொழிக் கொள்கையில் தொடர்ந்து உறுதியாக உள்ளது. மத்திய அரசின் ஜவஹர் நவோதயா வித்யாலயா குடியிருப்புப் பள்ளிகளுக்கு நிலம் ஒதுக்க முடியாது என்ற நிலைப்பாட்டை தவெக அரசு மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. கூடுதல் விவரங்கள் இங்கே:-

உச்ச நீதிமன்றம் கருத்து

உச்சநீதிமன்றத்தின் கருத்துக்கள் மற்றும் கல்வி அமைச்சரின் பதில்

நவோதயா பள்ளிகள் தொடர்பான வழக்கின் விசாரணையின் போது, "மாநிலங்கள் தனிநாடுகள் போல் செயல்பட முடியாது.

தமிழ்நாட்டு மண்ணில் இந்தி கற்பிக்கப்படாது என்ற நிலைப்பாட்டை எடுக்க முடியாது" என நீதிபதி நாகரத்னா அமர்வு கருத்து தெரிவித்தது.

இதற்கு பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் தவெக தலைவருமான ராஜ்மோகன் ஆறுமுகம், "நீதிபதியின் கருத்து ஒரு உத்தரவு அல்ல.

நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல. ஆனால் தமிழ் மண்ணில் தமிழளுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்." என்றார்.

நிலப் பிரச்சினை

நவோதயா பள்ளிகள் சர்ச்சையின் பின்னணியும் நிலப் பிரச்சினையும்

மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நவோதயா பள்ளிகள், கிராமப்புற மாணவர்களுக்கு இலவசக் கல்வியை வழங்கும் நோக்கில் மும்மொழிக் கொள்கையைப் பின்பற்றுகின்றன.

மத்திய அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் நவோதயா பள்ளிகளைத் திறக்க முயன்றாலும், தங்களின் இருமொழிக் கொள்கைக்கு (தமிழ் - ஆங்கிலம்) மாறாக மும்மொழிக் கொள்கையை மறைமுகமாகத் திணிக்கும் திட்டங்களுக்கு நிலம் ஒதுக்க முடியாது எனத் தமிழக அரசு மறுத்து வருகிறது.

இதற்கிடையே, நிலம் கண்டறிய தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் மேலும் 3 மாத கால அவகாசம் வழங்கியுள்ளது.

ADVERTISEMENT